மூதூர் முறாசில் எழுதிய “எரிகிடங்கைப் பயந்து கொள்!” நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, October 01, 2014

மூதூர் முறாசில் எழுதிய “எரிகிடங்கைப் பயந்து கொள்!” நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)ஊடகவியலாளர் மூதூர் முறாசில் எழுதிய ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக் கிழமை   மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
எழுத்தாளரும் கிழக்கு மாகாண சபைச்   செயலாளருமான  எம்.சி.எம்.ஷரீப்   தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் நூல் முதல் பிரதியை சமூக சேவையாளரும் மூதூர்  ‘திரிசீடி’ அமைப்பின் தலைவருமான  டாக்டர் கே.எம். ஸாஹிர் பெற்றுக் கொண்டார்.


இதன்போது நூல் அறிமுகவுரையை கவிஞர் மூதூர் முகைதீனும்   நூல் நயவுரையை கலாநிதி கே.எம்.எம்.இக்பாலும்  நிகழ்த்தினர். பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.ஜவாத் நளிமியின் சிறப்புரையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில்  மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர்ää மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்ää மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பி.ரி.எம்.பைசர்ää எழுத்தாளர் ஏ.எஸ்.உபைதுல்லா(அதிபர்)ää அளவீட்டு சேவைகளினதும் உபகரணங்களினதும் பரீசோதகர் ஏ.எல்.நௌசாத்ääதொழில் அலுவலர் எஸ்.எம்.நசார்,நன்நடத்தை பொறுப்பதிகாரி அஷ்ஷேய்க் எம்.பி.எம்.நளீம் நத்வி   உள்ளிட்ட பலர்     கலந்து கொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் எம்.எம்.அரூஸ்   தொகுத்து வழங்கினார்.

ஊடக அனுசரனை மூதூர் டீன் ஸடூடியோ & ஓடியோ சிஸ்டம் மற்றும் நிவ்மூதூர் இணையம்.


No comments:

Post Top Ad