பிலிப்பைன்ஸ் முஸ்லிம்களுக்கு சுயாட்சி அரசை உருவாக்க உடனடியாக சட்டம் வேண்டும் ! ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 14, 2014

பிலிப்பைன்ஸ் முஸ்லிம்களுக்கு சுயாட்சி அரசை உருவாக்க உடனடியாக சட்டம் வேண்டும் ! ஜனாதிபதி

ரோமன் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையான நாடான பிலிப்பைன்ஸின் தெற்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு செல்வாக்குள்ள  பகுதியில் சுயாட்சி அரசை உருவாக்க உடனடியாக சட்டம் நிறைவேற்றப்படவேண்டும் என்று பாராளுமன்றத்திற்கு அந்நாட்டின் அதிபர் பெனிட்டோ அகினோ கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் அதிபர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டனாவோவில் மோரோ முஸ்லிம்களுக்கு சுயாட்சிக்கான உரிமையை வழங்கும் சட்டத்தை உருவாக்கத்தான் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.கடந்த மார்ச் மாதம் மோரோ போராளிகளுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுயாட்சி அதிகாரம் வழங்கினால் மோரோ இஸ்லாமிக் லிபரேசன் ஃப்ரண்ட் தங்களுடைய ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்கும்.மோதல்களில் 1.2 லட்சம் பேர் கொல்லப்பட்டு, 20 லட்சம் பேர் வீடுகளை இழந்ததாக கூறப்படுகிறது.

No comments:

Post Top Ad