மூதூர் முறாசிலின் ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ நூல் வெளியீட்டு விழா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 22, 2014

மூதூர் முறாசிலின் ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ நூல் வெளியீட்டு விழாஊடகவியலாளர் மூதூர் முறாசில் எழுதிய ‘எரிகிடங்கைப் பயந்து கொள்!’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர் வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் மூதூர் அந்-நஹார் மகளிர் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.


எழுத்தாளரும் கிழக்கு மாகாண சபைச்   செயலாளருமான  எம்.சி.எம்.~ரீப்   தலைமையில்  இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் நூல் அறிமுகவுரையை கவிஞர் மூதூர் முகைதீன் ஆற்றவுள்ளார்.  நூல் நயவுரையை கலாநிதி கே.எம்.எம்.இக்பால் நிகழ்த்தவுள்ளார். அத்தோடு பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.ஜவாத் நளிமிää   மற்றும்  கலாபூசணம் எம்.எஸ்.அமானுல்லா ஆகியோரின்  சிறப்புரைகளும்  இடம்பெறவுள்ளன.

நூல் வெளியீட்டு விழாவில்  பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கலந்துகொள்ளவுள்ளார்.   மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்ää சட்டத்தரணி ஜே.எம்.லாஹிர் மற்றும் மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்  ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

நூல் முதல் பிரதியை சமூக சேவையாளரும் மூதூர்  ‘திரிசீடி’ அமைப்பின் தலைவருமான  டாக்டர் கே.எம். ஸாஹிர் பெற்றுக் கொள்ளவுள்ளார்.
உலமாக்கள்ääஅரசியல் பிரமுகர்கள்ääஊர் பிரமுகர்கள் இலக்கியவாதிகளென பலரும் கலந்து கொள்ளவுள்ள இவ்விழா நிகழ்ச்சிகளை அறிவிப்பாளர் ஏ.எஸ்.அப்துல்லா ஆசிரியர் தொகுத்து வழங்கவுள்ளார்.

ஊடக அனுசரணை மூதூர் பிரதான வீதியில் அமைந்துள்ள டீன் ஸ்டூடியோ & ஓடியோ சிஸ்ட்டம் மற்றும் மூதூரின் முதல் தர இணையச் செய்திச்  சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிவ்மூதூர் (www.newmuthur.com) இணையம். ஆகியன ஊடக அனுசரணை வழங்குகிறது.

No comments:

Post Top Ad