மூதூரையும் விளையாட்டுத் துறையையும் தாக்கிய கட்டுரைக்கு எதிராக - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, September 23, 2014

மூதூரையும் விளையாட்டுத் துறையையும் தாக்கிய கட்டுரைக்கு எதிராக(மூதூர் மைந்தன்)

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிவ்மூதூர் இணையத்தில் வெளியான (மூதூரில் இறுதியாக நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் அமளிதுமளி நடந்தது என்ன ? ) எனும் தலைப்பில் மூதூரில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியை விமர்சித்து ஊடுறுவி எனும் புனைப் பெயரோடு யாரே ஒரு முட்டாள் முட்டாள்தனமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் மூதூரில் நடைபெறுகின்ற உதைபந்தாட்ட போட்டியையும் மூதூர் உதைபந்தாட்ட சம்மேளனத்தையும் மிகவும் தரக் குறைவாக விமர்சித்து அந்தக் கட்டுரை எழுதப்பட்டது.


எனவே அந்த முட்டாள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும் அதாவது மூதுரில் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்ற இந்த உதைபந்தாட்டப் போட்டியானது எவரது உழைப்புக்காகவும் நடாத்தப்படுவது கிடையாது. அவ்வாறு நடாத்தப்பட்டு யாரிடமும் கோடிக் கணக்கில் சொத்துக்களும் இல்லை. மாறாக மூதூரில் மாலை நேரத்தில் மக்களுக்கு பொழுது போக்கை உண்டாக்குவதும்,இளைஞர்களிடையே விளையாட்டுத் திறணை வளர்ப்பதுவுமேதான் நோக்கமாகும்.

இறுதியாக மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சம்பவமானது . யாராலும் வேண்டுமென்றே தூண்டப்பட்ட வன்முறையும் கிடையாது. அது ஒரு எதார்த்தமாக இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை. அவற்றுக்கு சுமூகமான தீர்வும் எட்டப்பட்டுவிட்டது.

எனவே ஊடுறுவி அவர்களே !
தங்களால் மட்டும் கட்டுரை எழுத முடியும் என்பதற்காக இருப்பதையெல்லாம் எழுதி மூதூருக்கு கலங்கம் விளைவிக்க முயல வேண்டாம்.தைரியமிருந்தால் உங்கள் சொந்தப் பெயரில் முதலில் கட்டுரை எழுதி பழகுங்கள்.

இதே நேரம் அந்தக் கட்டுரையை மூதூர் முறாசில் எழுதியதாக தப்பாக உணர்ந்த சிலர் அவரைப்பற்றி முகப்புத்தகத்தில் விமர்சிப்பதை என்னால் காணமுடிந்தது. அவ்வாறானவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். மூதூர் முறாசில் என்பவர் ஒரு நல்ல மனிதர் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை உடனடியா வெளிச்சத்துக்கு கொண்டுவருகின்ற ஒரு சிறந்த ஊடகவியலாளர் எனவே அவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

No comments:

Post Top Ad