மூதூரில் இறுதியாக நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் அமளிதுமளி நடந்தது என்ன ? - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 21, 2014

மூதூரில் இறுதியாக நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப்போட்டியில் அமளிதுமளி நடந்தது என்ன ?(ஊரோடி)

மூதூரில் சமகாலமாக இடம்பிடித்துள்ள அதிகமான மக்களின் மனதைக் கவர்ந்துள்ள விளையாட்டாக பொழுதுபோக்காக மாறிப்போயுள்ள உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் தற்காலத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மூதூரின் ஒரு சில வேலையில்லா பட்டதாரிகளுக்கு இது ஒரு பொழுதுபோக்காகவும் மாறிவிட்டது.


சோறுதண்ணி இல்லாமல் தவமாய் கிடக்கின்றனர் இந்த உதைபந்தாட்ட போட்டிகளை காண்பதற்காக.இவற்றையெல்லாம் சாதகமாக பயன்படுத்தி ஒரு சில அரசியல் மேதைகள் விளையாட்டை அரசியலாக மாற்றி இறுதியில் ஊருக்குள் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அதன் ஒரு அங்கம்தான் கடந்த வெள்ளிக் கிழமை மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள்.

அமைச்சர் ஒருவரினால் நடாத்தப்பட்டு வந்த உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி கடந்த வெள்ளிக் கிழமை மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. மூதூர் மத்திய கல்லூரி (MCC) மற்றும் ரேஞ்சர்ஸ் அணிகள் பங்குபற்றிய இந்த இறுதி ஆட்டத்தில் ரேஞ்சர்ஸ் அணயினால் பெறப்பட்ட இரண்டு கோல்களும் செல்லுபடி அற்றது ( OFF ) என மூதூர் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் நியமிக்கபபட்ட பிரதான மத்தியஸ்தரினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாவது கோலிலே பிரதான மத்தியஸ்தரினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு என ரேஞ்சர்ஸ் அணியினர் கூறியதும் , மத்தியஸ்தர் தான் ஒரு டென்சனில் இருந்துவிட்டதாகவும் அதனாலேயே இவ்வாறான தீர்ப்பு வழங்கியதாகவும் கூறினார்.

இதன் பின்னர்தான் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் அதீதிகள் குழுமியிருந்த மைதானத்தில் ரேஞ்சர்ஸ் மற்றும் MCC அணிகளுக்கிடையில் முறுகல் ஏற்பட்டு இறுதியில் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு பிரச்சினை பெரிதாகியது. போட்டியும் இடை நிறுத்தப்பட்டது.

எம்.சீ.சிக்கு பக்கச் சார்பாக மத்தியஸ்தர் நடந்து கொண்டதாக ஒரு சாராரும் , அதே போன்று மத்தியஸ்தர் வழங்கிய தீர்ப்பு சரியானது என ஒரு சாராரும் தங்களக்குள் இன்னமும் சந்திக்குச் சந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டடிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.அத்தோடு இந்த இறுதிப்போட்டி தற்சமயம் எந்த ஒரு முடிவுகளும் இல்லாத நிலையில் போட்டி கைவிடப்பட்டுவிட்டது.இறுதியில் மூதூருக்குள் இரண்டு பிரிவுகளாக மாற்றப்பட்டுவிட்டது. இதுதான் மிகவும் மனவேதனையானதொரு விடயம்.

எனவே தங்கள் தொழிலாகவே உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்களை நடாத்திக் கொண்டிருக்கின்ற  MFA மற்றும் அரசியல் இலாபம் கருதி இதனை நடாத்த முன்வருகின் அரசியல்வாதிகள் , தங்களால் மாத்திரம்தான் எல்லாமே முடியும் என்று தங்களுக்குள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்ற சுயநலவாதிகள் மூதூர் SLS மீடியா ஆகியோருக்கு பணிப்பான வேண்டுகோளினை விடுக்கின்றேன்.

தயவு செய்து உங்களது சுயநலத்துக்காக அமைதியாக இருக்கின்ற மூதூர் மண்ணில் கலவரங்களை உருவாக்கி மூதூர் மக்களை பிளவுபடுத்தி மாற்று ஊர்களிடம் மூதூர் இளைஞர்களையும் மக்களையும் அவமானப்படுத்தி தலைகுனியச் செய்யாதீர்கள். மூதூர் மக்களுக்கென்று ஏனைய ஊர் மக்களிடம் ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கின்றது உங்களின் சுயநலத்துக்காக அதனை குழிதோண்டி புதைத்து விடாதீர்கள்.

1 comment:

முஸ்பீக் ahamed said...

மூதூர் முராசில் அவர்களே, உதைப்பந்தாட்டத்தில் சண்டை வருவது மூதூரில் மட்டுமல்ல. நாடளாவிய ரீதியில் ஏன் சர்வதேச தரத்திலும் சண்டைகளும் சர்ச்சையான தீர்ப்புக்களும் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் மூதூரில் அயல் கிராமங்களுடன் ஒப்பிடுகையில் பொழுதுபோக்கு தளங்கள் இல்லாத அல்லது கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் விளையாட்டு விரும்பிகள் ஒன்று கூடுவது தங்களது மாலை நேரத்தை நண்பர்களுடன் கழிக்கவே தவிர சண்டை பிடிக்கவோ அல்லது பிரிவினை உண்டாக்கவோ அல்ல. மாறாக நீங்கள் கூறிய வேலை இல்லா பட்டதாரிகளுக்கோ அல்லது சோறு இல்லாமல் தவமாய் கிடைபோருக்கோ அல்ல. அத்தோடு MFA இதனால் தங்களது பொன்னான நேரத்தை பல்வேறு வேலை பளுக்களுக்கும் மத்தியில் அர்ப்பணிக்கிறார்களே தவிர மாற்றமாக நீங்கள் கூறிய தொழிலாக உதைப்பந்து நடத்துபபவர்கள் அல்ல. தற்செயலான தவறுதான் நடந்ததே ஒழிய இது திட்டமிடப்பட்ட தப்பு அல்ல. தற்காலிக பிரிவினை அந்த மாலை நேரத்தில் உண்டானது அவ்விரவுடன் முடிந்து விட்டது. எனவே மூதூருக்கென்றே இணையம் உருவாக்கிய நீங்கள் சற்று ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தால் இன்னும் வளர வாய்ப்பிருக்கிறது.

Post Top Ad