கண்டி மதவழிபாட்டு தலம் மீதான தாக்குதல் குறித்து ஞானசாரரிடம் பொலிசார் விசாரணை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 22, 2014

கண்டி மதவழிபாட்டு தலம் மீதான தாக்குதல் குறித்து ஞானசாரரிடம் பொலிசார் விசாரணைகண்டியில் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீதான தாக்குதல் குறித்து ஞானசார தேரரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், கண்டியில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டுத் தலம் ஒன்றின் மீது குண்டர்கள் சகிதம் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

இதற்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஞானசார தேரரிடம் நேற்று பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பின்னர் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொண்டு அவரை அனுப்பியுள்ளனர்.

அவருக்கெதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இருந்த நிலையிலும் பொலிசார் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad