வேற்றரசும் இலங்கை இஸ்லாமிய உறவும் ...! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 14, 2014

வேற்றரசும் இலங்கை இஸ்லாமிய உறவும் ...!


(ஸூஹைர் அலி)

மனிதர்கள் சேருவதற்கான அடிப்படை இறை நம்பிக்கையாகும் ஏனெனில் இறை நம்பிக்கை தான் மனித ஆத்மாவின் மிகச் சிறந்த பண்பாகும் இறைவனுடனான இந்த தொடர்பு -பிணைப்பு மறைந்து விடுமானால் பிறகு எந்த விதமான ஒற்றுமையும் இல்லை உலகும் முழுவதிலும் இரு கட்சிகளே உண்டு ஒன்று இறை கட்சி மற்றது சைத்தானின் கட்சி இறைவனின் கொடியின் கீழ் தங்கி அவனது இன்னல்களை தாங்கிக் கொண்டிருப்பவர்கள் இறைக் கட்சிஇ இறைவனின் சட்ட திட்டங்கள் எனும் கொடியின் கீழ் நிற்காத எல்லா சமூகங்களும்இகுழுக்களும்இஇனங்களும் இதனிப்பட்டோர் ஆகியோர் சைத்தானின் கட்சியை சேர்ந்தவர்.


இறைவன் திரு மறையில் நம்பிக்கையாளர்கள் எல்லோரையும் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்த எல்லா இனஇநிற குழந்கொத்திரன்களை சார்ந்த எல்லா நம்பிக்கையலர்களையும் நூஹ் (அலை) காலத்திலிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் களம் வரை எல்லா நூற்றாண்டுகளிலும் வாழ்ந்தொரையும்  இவ்வாறு ஆணை இடுகிறான்.
நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால்இ என்னையே நீங்கள் வணங்குங்கள்.(21:92)

இஸ்லாமிய அமைப்பினால் ஆளப்படுகின்ற இஸ்லாமியச் சட்டங்களுக்கினங்க நிர்வகிக்கப் படுகின்ற பகுதிகள் இஸ்லாமிய அரசு (தாருல் இஸ்லாம்) எனப் படும் அப் பகுதி வாழ்கின்ற மக்கள் எல்லோரும் முஸ்லிம்களாக இருந்தாலும் அல்லது அவர்களுள் சிலர் வேறு மதங்களை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரியே. இஸ்லாமிய அமைப்பினால் ஆளப்படாத இஸ்லாமிய சட்டங்களுக்கு இணங்க நிர்வகிக்கப்படாத பகுதிகள் வேற்றரசு (தாருல் ஹர்ப் ) எனக் கருதப் படும் அங்கு வாழும் மக்கள் எம்மதத்தை சர்ந்த்தவராக இருந்தாலும் சரியே.

இவ்வாறு இஸ்லாமிய அரசுக்கும் வேற்றரசுக்கும் இடையே இருக்க வேண்டிய உறவுஇதொடர்புகலை இஸ்லாம் ஒருபோதும் புறக்கணிக்கவில்லை ஆனாலும் நல்லொலுக்கம்இதூய்மை நேர்மை-இவற்றிற்கு உட்பட்டு இவ்விரு அரசு தொடர்புகளும் தெளிவாக திட்ட வட்டமாக வரையறுக்கப் பட்டுள்ளன.

முஸ்லிம் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் தவறு செய்யும்போது அவர்களிடமும் அவர்களின் உடயவர்களிடமும்   உபதேசம் செய்ய வேண்டும் எனில்
மார்க்கம் என்பது உபதேசம்தான் என நபி ஸல் அவர்கள் கூறியதும் சகாபாக்கள்  யாருக்கு அல்லாஹ்வின் தூதரேஇ..! என கேட்டார்கள் அதற்கு அல்லாஹ் அவனது வேதம் அவனது தூதர்   முஸ்லிம்களின்இஅதிகாரிகள் பொதுமக்கள் அனைவைரைப் பொறுத்துதான் எனக் கூறினார்கள் மேலும் கூறினார்கள் சிறந்த ஜிஹாத் என்பது சத்தியத்தை அநியாயக்கார அரசனின் முன் எடுத்துச் சொல்வதுதான் என்பதும் நபி மொழி.

மனிதனுக்கு முன்னாலும்இ பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும்இ தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில்இ அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால்இ அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.(13:11)

இதே கருத்தை வலி உறுத்தி ஒருவர் கூறினார் 'உங்களின் இதயங்களில் முதலில் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துங்கள் பிறகு பூமியில் அது தானே தோன்றும் என்று'


இலங்கை ஒரு வேற்றரசு நாடு என்பதனால் நாம் பல சானக்யங்களுடன் அரசியல் இராஜ தந்திர ரீதியாக போராட வேண்டி இருக்கின்றது ஏன் நபி முஹம்மது (ஸல்) அலை அவர்கள் கூட குரைசிக் காபிர்களை அனுசரித்துஇஅவர்களையும் ஒப்பந்த அடிப்படையில் பல விதி முறைகளையும் கையாண்டு வந்துள்ளார்கள்  ..!!

ஆட்சியதிகாரம்இ நிர்வாகப் பொறுப்புகள்இ பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள்இ ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்த நிலையில் மரணிப்போரின் மறுமை நிலையோ மகா பயங்கரமாகவே இருக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.

‘நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)இ நூல்: புகாரி
தந்தைக்கிருக்கும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி பிள்ளைகளும் அரசியல்வாதிகளின் நெருங்கிய உறவினர்களும் சகாக்களும் எமது மக்களின் வரிப்பணமாகிய அரசுக் கருவூலத்தில் கையாடல்கள் செய்வதும் அவற்றை வீண் சுகபோகங்களுக்காக அள்ளி இறைப்பதும் தற்கால அரசியலில் உணரப்படாத தீமைகளாகவே காட்சியளிக்கின்றன. திறை சேரிப் பணங்களின் இத்தகைய துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு அரசியல் வாதிகளின் பூரண ஒத்துழைப்பும் அவர்களுக்கு கிடைக்கிறது.

ஆனால்இ முன்மாதிரி மிகு அரசியல்வாதி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திறைசேரி விடயத்தில் தன்னையும் சுத்தப்படுத்திஇ தனது குடும்பத்தினரையும் எந்தளவு பாதுகாத்து இருக்கிறார்கள் என்பதை பதவிக்கு வரும் ஆட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் தம்மை ஒருமுறை சுய விசாரணைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

‘நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் எனும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து ‘துப்பு துப்பு’ என்று தமது பேரனிடம் கூறிஇ துப்பச் செய்தார்கள். (நூல்: புகாரி 1485இ 1491இ 3072)

இங்கே நபி (ஸல்) அவர்களின் பேரனாக இருந்தவர் அப்போது சிறுவயதுப் பாலகர். குழந்தைகளின் தவறுகளுக்கு இறைவனும் தண்டனை கொடுப்பதில்லை. இத்தகைய தவறுகளை மனிதர்களில் எவரும் பொருட்படுத்துவதுமில்லை. இருப்பினும் அரசுக் கருவூலம் என்பது அமானிதமாதலால் அதை எம்முறையிலும் துஷ்பிரயோகம் செய்யலாகாது என்ற நபிகளாரின் உறுதிமிகு கொள்கையே வாயில் போட்ட ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட விழுங்க விடாமல் துப்பச் செய்தமைக்கான காரணமாக இங்கே அவதானிக்க முடிகின்றது.

வேற்றரசுடன் இஸ்லாமிய அரசு ஓர் உடன் படிக்கை அல்லது ஒப்பந்தம் செய்து கொள்ளுமாயின் அதனை முறைப்படி முழுமையாக நிறைவேற்ற வேண்டும் ஏமாற்றுதலும் நம்பிக்கை கேடு செய்தலும் இஸ்லாத்தில் இடமில்லை.

இலங்கை அரசுடன் ஒட்டிக் கொண்டு ஒன்றுமே புடுங்க முடியாது என்று ஒரு சாராரின் வாதம் ஒரு பக்க விவாதத்திற்கு சரியாக இருந்தாலும் சில யுக்திகளை கையாண்டு சாதிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டோம். எல்லோரும் பிரிந்து நிற்கின்றனர் ஒரு சாரார் மாத்திரம் ஒதுங்கி நிற்கின்றார் என்றால் அவரை தூற்றலாம் அனால் நம் முஸ்லிம் என்று சொல்லும் எல்லா பலம் வாய்ந்த கட்சிகளும் ஆலமரத்துடன் அல்லவே இருக்கின்றது எத்தனை உதாரணம்இஉவமை சொன்னாலும் நமக்கு எட்டப் போவதில்லை என்பதும் ஒரு உண்மை ..!

No comments:

Post Top Ad