மூதூரில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை முதலிடம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, September 22, 2014

மூதூரில் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை முதலிடம் (படங்கள் இணைப்பு)(ஏ.ஜே.ஹஸன் அஹமட்)

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை(19) மூதூர் எம்,சி,சி மைதானத்தில் இடம் பெற்றது.


கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சிக் கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.


இறுதி நாள் நிகழ்வாக 100M, 200M,1500M,  4X100M,  4X400M போட்டிகள் இடம்பெற்றது.
இதில் 100M, 200M,  நிகழ்வில் முதலிடத்தை அட்டாளைச்சேனை பிரதேச  செயலகத்தை சேர்ந்த(ஒலூவில்)  ஏ.ஆர்.எம்.ரஜாஸ் கான் பெற்றுக்கொண்டார்.

4X100M அஞ்சல் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச அணியே முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

படத்தில் அஞ்சல் போட்டியில் கலந்து கொண்ட ஏ.ஆர்.எம்.ரஜாஸ் கான்இ ஜ.ஏ. நூஸ்றி,  எம்.எம். ஆசிரியர் அஸ்மி,  எம்.எம்.முபிஸ் ஆகியோருடன் பயிற்றுவித்த அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜீத்தீன் ஆகியோரை காணலாம்.

இவ்விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றி வெற்றி பெற்ற வீரர்களுக்கும்இ பயிற்றுவித்த  விளையாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். தாஜீத்தீன் க்கும் அட்டாளைச்சேனை சுப்பர்சொனிக் விளையாட்டுக்கழகம்இ ஸம்ஸம் இளைஞர்  கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
No comments:

Post Top Ad