கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லாகீர் ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பு (படங்கள் + ஓடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, September 05, 2014

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம். லாகீர் ஆளுநர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்பு (படங்கள் + ஓடியோ இணைப்பு)கிழக்கு மாகாண சபைக்காக மூதூரிலிருந்து தெரிவாகியுள்ள சிரேஷ்ட சட்டத் தரணி ஜெயினுதீன் முஹம்மது லாகீர் இன்று 10.00 மணியளவில் கிழக்கு மாகாண சபை ஆளுநர் முன்னிலையில் ,  திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் காரியாலயத்தில் சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றார். இவரது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு மூதூர் அக்கரைச் சேனை பெரிய பள்ளிவாசலில் இவருக்காக துஆ பிரார்த்தனை நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் , கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியபதி கலப்பதி,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், சுகாதார அமைச்சர் மன்சூர், அமைச்சர் உதுமாலெப்பை மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர். அத்தோடு ஊர் பெரியார்கள் மாகாண சபை உறுப்பினர் .ஜே.எம்.லாகீரின் தந்தை ஜெயினுதீனும் தாயாரும் உள்ளடங்கிய குடும்பத்தாரும் இவ் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபைக்குள் காலடி எடுத்து வைத்துள்ள ஜே.எம் லாகீர் அவர்களுக்கு நிவ் மூதூர் இணையம் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, இவரது இந்த அரசியல் பயணம் நல்லவாறு தொடர நிவ் மூதூர் குழு இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கின்றோம்.

இன்றைய இந்நிகழ்வுகளின் ஓடியோ தொகுப்பினை கேட்பதற்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்No comments:

Post Top Ad