ஜனாதிபதி சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி மூதூரில் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 21, 2014

ஜனாதிபதி சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி மூதூரில் (படங்கள் இணைப்பு)கிழக்கு மாகாண மூவின மக்களையும் ஒன்றிணைக்கும் உன்னத நோக்கத்துடனான ஜனாதிபதி சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுத் தொடர் இன்று மூதூர் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.


YSO முபாரிஸ் தலைமையில் நடைபெற்ற இத்தொடருக்கு பிரதம விருந்தினர்களாக மாகாண சபை உறுப்பினர் ப்ரியந்த பத்திரண அவரோடு சிறப்பு விருந்தினராக திருகோணமலை இளைஞர் சேவைகள் சம்மேளன அதிகாரி A.அமீர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

5 ஓவர்கள் 6 பேர் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டிக்கு மூதூர் தொகுதியிலுள்ள மூதூர் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட 25 அணிகள் பங்குபற்றியது.இந்த 25 அணிகளுக்குள் மூதூரிலிருந்து சதாம் தலைமையிலான நெஸ்னல் அணியும் இர்பான் தலைமையிலான ஆசாத்நகர் டிஸ்கவரி அணியும் மாவட்டமட்ட சுற்றுப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இத்தொடருக்கு மூதூர் டீன் ஸ்டூடியோ மற்றும் மூதுரின் இணையச் செய்தி சேவையை உலகெங்கும் எடுத்துச் செல்லும் நிவ்மூதூர் (www.newmuthur.com) இணையம் ஆகியன ஊடக அனுசரணை வழங்கியது.


No comments:

Post Top Ad