மூதூர் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கௌரவிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 17, 2014

மூதூர் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு கௌரவிப்பு (படங்கள் இணைப்பு)
மூதூரின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய திரு.வித்யானந்த மூர்த்தி அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று தி/மூ/அல்-ஹிதாயா மஹாவித்தியாலயத்தில் நடைபெற்றது.


மூதூர் பாடசாலைகள் அதிபர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யபட்ட இந் நிகழ்வில் மூதூரின் தற்போதைய வலயக்கல்விப் பணிப்பாளர் உற்பட மூதூரிலுள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களும்,ஆசிரியர்களும் பங்குபற்றினர்.

மூதூர் வலயத்தில் கடமையாற்றிய முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளரை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு தங்கச் சங்கிலியும் அனிவித்து கௌரவிக்கப்பட்டது.

மூதூர் அதிபர்கள் சங்கத் தலைவர் ஜே.எம்.இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தி/மூ/அந்தோனியார் மகாவித்தியாலய மாணவர்களின் பேண்ட் வாத்தியங்களும் , சண்பகா வித்தியாலய மாணவர்களின் இசை நிகழ்வும்,சேனையூர் மத்திய கல்லூரி மாணவிகளின் நடனம்,மூதூர் முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகளின் ஹஸீதா போன்ற  நிகழ்வுகளும் இடம்பெற்றது.No comments:

Post Top Ad