“Ahmed Abdi Godane” -ன் மறைவும் பென்டகனின் வெற்றியும் !! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 14, 2014

“Ahmed Abdi Godane” -ன் மறைவும் பென்டகனின் வெற்றியும் !!


தாக்கிய விமானத்தின் பெயர்-US.AGM 114. தாக்கிய ஏவுகணையின் பெயர்- HELL FIRE   அழிக்கப்பட்ட மனிதரின் பெயர்-Ahmed Abdi aw-Mohamed (Moktar Ali Zubeyr / Ahmed Abdi Godane). சோமாலியாவில் அமெரிக்க ட்ரோன் மேற்கொண்ட தாக்குதலில் அல்-ஸாபாப் அதன் முன்னிலை தளபதிகளையும் தலைவரையும் இழந்திருந்தது. 2014-ல் பென்டகன் மேற்கொண்ட தாக்குதல்களில் இது ஒரு பெரிய வெற்றி.
இதற்கு முன்னர் இது போலவே பல முன்னிலை போராளிக்குழுக்களின் தலைவர்கள் அழிக்கப்பட்டிருந்தனர். . உஸாமா பின் லாதின் (அல்-காயிதா), முஸ்அப் அல் ஸர்க்காவி (அல்-காயிதா ஈராக் கொமாண்ட் இன் சீஃப்), உமர் அல் பக்தாதி (இஸ்லாமிக் கிலாபா ஒப் ஈராக்), முல்லா Dadullah (ஆப்கான் சீஃப் கொமாண்டர் ஒப் அல்-காயிதா), டோகு உமரோவ் (கவ்கஸ் அமீர்), உபைத்துல்லாஹ் மசூத் (பாகிஸ்தான் தஃரீக் ஈ-தலிபான் சீஃப் கொமாண்டர்), செய்ட் அல் சூரி (அராபிய தீபகற்ப அல்-காயிதா கொமாண்டர்) போன்றவர்கள் வரிசையில் இப்போது சோமாலிய தளபதி அஹ்மத் அப்தி கொடானும் இணைந்துள்ளார். 

 தெற்கு மற்றம் மத்திய ஆசிய அமெரிக்க போர் முனையில் அது மகத்தான வெற்றி பென்டகனிற்கு. Ahmed Abdi Godane-ன் இழப்பு என்பது அல்-ஸபாப்பை பொருத்த வரை ஈடு செய்ய முடியாதது. ஒரு வாரம் கழிந்த நிலையில் புதிய தலைவரை அதன் சூரா கவுன்சில் தெரிவு செய்துள்ளது.  Sheikh Ahmad Umar என்பவர் அல்-ஸபபாப்பின் புதிய தலைவராக உருவாகியுள்ளார். 

Sheikh Ahmad Umar. ஜிஹாதிய வட்டாரங்களில் இவரை Abu Ubaidah என அழைப்பர். இந்தப் பெயர் சோமாலியாவ, எதியோப்பிய, தன்சானியா, எரிட்ரியா, சாட் போன்ற தேசங்களின் உளவமைப்புக்கள் வேட்டையாட தவமிருக்கும் பெயர். வரும் அல்-காயிதா வலையமைப்பில் மிகவும் அங்கீகாரத்திற்கு உரிய நபர். பல வருடங்கள் அல்-காயிதாவுடன் நெருக்கமாக செயற்பட்டவர். அல்-காயிதாவின் தலைவர் என வெளிக்காட்டப்படும்அய்மன் அல்-ஸவாஹிரி அவர்கள் இவரது தெரிவை வரவேற்றுள்ளதுடன் “அல்-ஸபாப் சிறந்த நபரை உரிய நேரத்தில் தேர்வு செய்துள்ளதாகவும், இறைவன் இவரை பாதுகாக்க வேண்டும்” என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

Ahmed Abdi Godane -ன் மறைவு அல்-ஸபாப்பிற்கு பெரிய இழப்பாகும். அதன் தலைவராக, ஆன்மீக குருவாக, மிலிட்டரி கெமாண்டராக, அந்த அமைப்பின் ஸ்தாபகராக, அல்-காயிதாவின் சோமாலியாவிற்கான பொருப்பாளராக பல நிலைகளில் மிக கடுமையாக உழைத்தவர். சீ.ஐ.ஏ. இவரின் அசைவுகளை கண்காணிப்பதில் பெருத்த பிரயத்தனங்களை பல காலமாக மேற்கொண்டு வந்தது. இறுதியில் வெற்றியும் கண்டது. 

ஆப்கானிஸ்தான் தலிபான் போராளிகளின் தலைவர் முல்லாஹ் ஒமர் அவர்களும் தன் பங்கிற்கு Ahmed Abdi Godane -ன் மரணத்தை தன் பங்கிற்கு கவலையுடன் நினைவு கூர்ந்துள்ளார். ஒரு மிகச் சிறந்த மனிதரையும், நேர்மையாளரையும், இறைவனிற்காக போராடிய போராளியையும் ஜிஹாத் இழந்து நிற்பதாக சிலேகித்துள்ள அவர், தனக்கு அவரை மிகவும் பேர்சனலாகவே தெரியும் என்றும், இவரது இழப்பு சோமாலிய விடுதலையில் பெரும் தாக்கத்தை உருவாக்கும் என்றும் கவலைப்பட்டுள்ளார். 

நீரிழிவு நோய்க்கு எப்படி சைலன்ட் கில்லர் என்று ஒரு பெயர் உள்ளதோ, அது போலவே போராளி வட்டாரங்களில் ட்ரோன்களிற்கும் சைலன்ட் கில்லர் என்று பெயர் உள்ளது. வருவதும் தெரியாது. வட்டமடிப்படும் தெரியாது. தாக்குவதும் தெரியாது. போவதும் தெரியாது. மந்திர தாக்குதல்கள் போல் அவை செயற்படுகின்றன. என்ஜின் இல்லாமல் மின்கலங்களால் இயக்கப்படும் ட்ரோன்கள் சத்தமில்லாமல் நகர்வதே இதன் வெற்றியின் ரகசியம். இதன் சிறிய வடிவமைப்பு பட்டம் ஒன்று வானில் பறப்பது போலவே தோற்றமளிக்கும். இன்று உலகின் பல தேசங்கள் ட்ரோன் கட்டமைப்புக்களை தங்கள் படைகளின் தனப்பிரிவாகவே உருவாக்கி வருகின்றன. 

அமெரிக்காவும் ஐரோப்பிய தேசங்களும் “இஸ்லாமிய பயங்கரவாதம்” என குறிப்பிடும் விவகாரத்தில் இந்த தாக்குதல் என்பதும் அதில் ஏற்பட்ட இழப்பு என்பதும் அவர்களிற்கு ஒரு வெற்றியும் திருப்பு முனையுமாகும். இவரது இழப்பின் தாக்கத்தை ஆசியாவிலோ, மத்திய கிழக்கிலோ உணர முடியாது. முல்லாஹ் ஒமர் சொன்னது போல அது ஆபிரிக்காவின் இஸ்லாமிய விடுதலை போராட்டத்தை மீண்டும் பல காததூரம் பின்தள்ளி உள்ளது என்பது உண்மையே. 

Ahmed Abdi Godane-ன் மறைவு பற்றி அல்-காயிதா தலைவர், தலிபான் தலைவர், தஃரீக் ஈ-தலிபான் தலைவர், அன்சாருல் முஜாஹிதீன் தலைவர் போன்ற பலரும் பிரஸ்தாபம் செய்துள்ள நிலையில் அமெரிக்க அதிபரும், பென்டகன் பேச்சாளரும் கூட பிரஸ்தாபம் செய்துள்ளனர். இதிலிருந்து அவர் ஜிஹாத் ஆதரவு களத்திலும் அமெரிக்க எதிரப்பு தளத்திலும் எத்தகைய ஒரு காத்திரமான பங்கு வகித்துள்ளார் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். 

(கைபர்)

No comments:

Post Top Ad