பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி மர்ஹ_மா மு.ச.பாத்திமா சீமா எனும் 9 வயது சிறுமியின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கும் நிகழ்வு-படங்கள். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 17, 2014

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி மர்ஹ_மா மு.ச.பாத்திமா சீமா எனும் 9 வயது சிறுமியின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கும் நிகழ்வு-படங்கள்.(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் அண்மையில் காம வெறியன் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று பிரிந்த பாடசாலை மாணவி மர்ஹ_மா மு.ச. பாத்திமா சீமா எனும் 9 வயது சிறுமியின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கும் நிகழ்வு 17-09-2014 இன்று புதன்கிழமை காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.


காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் ஜனாபா எம்.அப்துல் ஸலாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி முதலாம் குறித்தி மீரா பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் தலைவரும்ääகாத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவருமான எம்.ஐ.எம். சுபைர் ääகாத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய அபிவிருத்தி சங்க செயலாளர் கரீம் ஜேபி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மர்ஹ_மா பாத்திமா சீமாவின் மறுமை வாழ்வுக்காக விஷேட துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது இதனை காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் பேஷ் இமாம் மௌலவி எம்.ஐ.ஆதம் லெப்பை பலாஹி நடத்தி வைத்தார்.

இங்கு விஷேட உரையை மௌலவி எம்.ஐ.ஆதம் லெப்பை பலாஹி நிகழ்த்தினார்.

இதில் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஆசியர்கள் மற்றும் மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட ஒரு தொகை பணம் ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் ஜனாபா எம்.அப்துல் ஸலாமினால் மாணவி மர்ஹ_மா மு.ச.பாத்திமா சீமாவின் தாயாரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர்கள்ää காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய ஆசிரியர் அமீர் அலி உட்பட ஆசிரிய ஆசிரியைகள்ääபிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.ஐ.நாஸர்ääகாத்தான்குடி ஷ{ஹதாக்கள் நிறுவனத்தின் செயலாளர் முஹம்மட் றிஸ்வி ääபாடசாலை மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.No comments:

Post Top Ad