காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, September 14, 2014

காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதி(பழுலுல்லாஹ் பர்ஹான்;;)

இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு  ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுää அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக  மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவித்ததாவதுää சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு 15 வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும்ää அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு 11-13 வயதிற்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள் 31-10-2014 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் போது கட்டாயமாக விண்ணப்பதாரிகளின் முழுப் பெயர்ää வயதுää கல்வித் தரம்ää சேரவிரும்பும் பகுதி விலாசம்ää தொடர்பு கொள்ள வசதியான தொலைபேசி இலக்கம் என்பன பற்றிய முழு விபரங்கள் அடங்கிய சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்களை

அதிபர்ääஇப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரிää த. பெ. இல: 105ää இல.50ää ஹிரிம்புர குறுக்கு வீதிää காலி என்ற முகவரிக்கு  அனுப்பிவைக்க முடியும்.

அல்லது தொ.பே.இல. : 0912243672 ,077 7921418 இணையத்தளம www.ibnuabbas.org

தொ.நகல் : 0912222037 

ஈமெயில்:ibnuabbas.galle@gmail.com 

முகவரிக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன்  (பஹ்ஜி) தெரிவித்தார்.


இங்கு மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படுவதுடன் மாணவர்கள் க. பொ. த. சாஃதää உஃத. பரீட்சைகளுக்கும் தயார்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post Top Ad