மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் 14 வது சிராத்த தினம் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, September 17, 2014

மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் 14 வது சிராத்த தினம் மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)(மாகாண சபை உறுப்பினர் அன்வர் ஊடகப் பிரிவு)மறைந்த மாமனிதர் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹ{ம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் 14வது சிரார்த்த தினத்தை ஞாபகப்படுத்தும் நிகழ்வு மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் கட்சிப் போராளிகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றது மாகாண சபை உறுப்பினர் லாஹீர் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் கரீஸ் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட உலமாக்கள் பள்ளிவாயலின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதோடு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்
பெருந்தலைவர் அஸ்ரப் அவர்கள் முஸ்லீம் சமூகம் அரசியல் முகவரி இல்லாமல் திக்கித் திணறிய காலத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் முகவரியை தேடித் தந்தவர் எமது பெருந்தலைவரை முஸ்லீம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல இலங்கையில் வாழும் முழு முஸ்லீம் சமூகமும் ஞாபகமூட்டிப் பார்ப்பது அவசியமானது. மர்ஹ{ம் அஸ்ரப் அவர்கள் அரசியல் முகவரியினூடாக சமூகத்தின் உரிமைகளை பெற்றத்தந்தது மாத்திரமல்ல கல்வி மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளிலும் முஸ்லிம்களுக்கென்று தனியான கல்விக் கூடங்கள் மட்டுமல்ல பல்கலைக்கழகம் போன்றவற்றை உருவாக்கி இன்றைய கல்வி வளர்ச்சிக்கு அன்றே வித்திட்டவர் எமது பெருந்தலைவர் என்பதை எமது சமூகம் மறந்து விடக்கூடாது. இந்த நாட்டிலே கடந்த காலங்களில் அரசியலில் ஆட்சியிலே சிறுபாண்மை முஸ்லிம் அரசியல் மூலம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிருபித்து காட்டிய ஒரு சாணக்கிய தலைவர் என்பதை நாம் நினைவில் வைப்பதுடன் வட கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் முஸ்லீம் சமூகத்திற்கு மாத்திரமல்ல வட கிழக்கிற்கு அப்பாலுள்ள முஸ்லீம் சமூகத்தையும் தனது கருத்தில் கொண்டு அரசியலை மேற்கொண்டது மாத்திரமல்ல ஆயுத கலாச்சாரத்தால் ஒரு போதும் ஜனநாயக நீரோட்டத்தை பெற முடியாது அரசியல் என்ற ஒரு வடிவமே தக்க தீர்வு என்று தீரக்க தரிசனமாக கூறிச்சென்றார் எனவே எந்நேரமும் அவரின் ஆத்ம திருப்திக்காக பிராத்தனை புரிவதும் சாலப் பொருத்தமெனவும் கருதுகின்றேன். எனக் கூறினார்.

No comments:

Post Top Ad