மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு எட்டு வருடங்களை நினைவு கூர்ந்து மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி அவர்கள் ஆற்றி உரையின் சுருக்கம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, August 05, 2014

மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு எட்டு வருடங்களை நினைவு கூர்ந்து மூதூர் பிரதேச சபையின் உறுப்பினர் அஷ்ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி அவர்கள் ஆற்றி உரையின் சுருக்கம்மூதூர் முஸ்லிம்கள் வெளியோற்றப்பட்டு (2014-08-04)  எட்டு வருடங்களாகின்ற இந் நிலையில் அவ் அசம்பாவித நிகழ்வில் மரணமடைந்த உறவுகளுக்காக ஜன்னதுல் பிர்தவ்ஸை வழங்க புகழுக்குறிய அல்லாஹ்விடம் கையேந்திய மணமுறுகி பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்.


ஒட்டுமொத்த மூதூர் முஸ்லிம்கள் 2006.08.04 வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகை கூட இல்லாமல் புலிப் பயங்கரவாதிகளால்; விறட்டப்பட்ட கசப்பான நிகழ்வு எங்கள் நெஞ்சங்களில் இருந்து அகழவில்லை. உறவுகளை இழந்துää உடமைகள் பறிக்கப்பட்டுää உணர்விழந்த சமூகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

புலிகளின் விடுதலைப்போராட்டத்திற்கு மூதூர் முஸ்லிம்கள் தடையாக இருந்தோமா? ஏதற்காக எமது தாய்மார்களை விதவைகளாக மாற்றினீர்கள்? உடல் உறுப்புக்களை இழந்திருக்கிறோம்ääஉடமைகள் சு10ரையாடப்பட்டு  வெறுங் கையோடு  ஆண்கள் வேறாகää பெண்கள் வேறாக பிரித்தெடுத்து எம்மை விரட்டியடித்த நிகழ்வு புலிப்பயங்கரவாதத்தின் வரலாற்றுத் துரோகமாகும். நாங்கள் முஸ்லிம் என்பதற்காகவா எம்மை விரட்டியடிக்க முயற்சித்தீர்கள்? அல்லது மூதூர் மண் தமிழ் தேசியத்தின் பூமியா? இவை இற்றை வரைக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.

நாம் கந்தளாய்க்கு அகதிகளாக சென்ற போது அப்பிரதேச மக்கள் முடியுமான உதவிகளை புரிந்ததோடுää நாட்டின் நாலா புறத்திலும் இருந்து வந்த முஸ்லிம்கள் செய்த உதவிகளையும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். மூதூர் மக்களின் வெளியேற்றம் மனிதாபிமாணமற்ற செயல் என்று பல அரசியல் தலைமைகள் கூறியிருந்தும் ஆனால் தமிழ் தேசிய தலைமைகள் இவ்விடயத்தில் மௌனமாகவே இருந்தார்கள்.

எட்டு வருடங்கள் கழிந்த நிலையில் அரச இயந்திரத்தின் அசமந்த போக்கின் காரனமாக முறையான நஷ்டஈடுகள் எதுவும் இற்றைவரைக்கும் பெற்றுக் கொடுக்கப்பட வில்லை என்பதுதான் மறைக்க முடியாத உண்மையாகும்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டினை பெற்றுக்கொடுக்க கௌரவ முதலமைச்சர் ஆர்வங்காட்ட வேண்டும். இவ்வாறான கசப்பான நிகழ்வு எந்த சமூகத்திற்கும் வந்துவிடக்கூடாது என அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.


 

No comments:

Post Top Ad