இஸ்ரேலிய இராணுவம் வெளியேறப்போவதாக திடீர் அறிவிப்பு (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, August 05, 2014

இஸ்ரேலிய இராணுவம் வெளியேறப்போவதாக திடீர் அறிவிப்பு (வீடியோ இணைப்பு)காஸாவில் இருந்து மொத்த இராணுவ படைகளும் வாபஸ் பெறுவதாக இஸ்ரேல் இராணுவம் திடீரென அறிவித்துள்ளது.
கடந்த 28 நாட்களாக காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வந்துள்ளது.

இதில் இதுவரை சுமார் 1900 பாலஸ்தீனியர்களும், 67 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் மனித நேய அடிப்படையில் 72 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல்-ஹமாஸ் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, அதிகாலை 8 மணி முதல் 72 மணி நேரங்களுக்கு இந்த போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் இராணுவ உயரதிகாரி லெப்டினெண்ட் கொலோனெல் பீட்டர் லெர்னெர் கூறியதாவது, போர் நிறுத்த நேரம் தொடங்கிய உடனே காஸாவில் முகாமிட்டுருக்கும் இஸ்ரேல் ராணுவத்தின் படைகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் (உள்ளூர் நேரப்படி) செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குள் படைகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு திரும்பி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad