தோப்பூர் நாவற்கேணி காணி விடயமாக முதலமைச்சர் கரியாலயத்தில் விசேட கூட்டம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, August 22, 2014

தோப்பூர் நாவற்கேணி காணி விடயமாக முதலமைச்சர் கரியாலயத்தில் விசேட கூட்டம் (படங்கள் இணைப்பு)
கடந்த சில தினங்களுக்கு முன்பு தோப்பூர் நாவற்கேணி கிராம முஸ்லீம் மக்களுக்கு சேருவாவில பிரதேச செயலாளரினால் 2014.08.30ம் திகதிக்கு முன்னர் அப்பிதேசத்திலிருந்து வெளியேறுமாறு கிராம சேவையாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து கிராம சேவையாளர் மக்களுக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டது. பின்னர் இவ்விடயம் தொடர்பாக பிரதேச மக்களால் கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதன் மூலம்  அவரால் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டு அது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைக்காக மா.ச.உ. கௌரவ ஆர்.எம்.அன்வர் அவர்களின் தலைமையில் 2014.07.14 அன்று குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அக்குழுவில் கௌரவ முதலமைச்சரின் செயலாளர் அஸீஸ் மாகாண காணி ஆணையாளர்ää பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரும் அங்கு சென்று கிராம மக்கள் மற்றும் பள்ளிகளின் தலைவர்களுடனும் கலந்துரையாடி அவர்களின் பிரச்சினை தொடர்பாக தகவல்களைப் பெற்றுக்கொண்டதுடன் பிரச்சினை தொடர்பான இடங்களையும் பார்வையிட்டனர்.அதற்கிணங்க குறித்த பிரச்சினை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகாக 2014-08-21 ம் திகதி தீர்மானிக்கப்பட்டது. அதற்கமைவாக இன்று பி.ப.03.00மணியளவில்  முதலமைச்சர் காரியாலத்தில் வைத்து மாகாண முதலமைச்சர் தலைமையில்; இடம் பெற்ற கலந்துரையாடலில் மா.ச.உ.ஆர்.எம்.அன்வர்ääமுதலமைச்சரின் செயலாளர் அஸீஸ் மாகாண காணி ஆணையாளர்ää மேலதிக அரசாங்க அதிபர்ää பிரதேச சபை உறுப்பினர் பைசர் ஹாஜிää பிரதேச செயலாளர்ää சேருவாவில மற்றும் செல்வநகர் பௌத்த விகாராதிபதிகள்ää நாவற்கேணி பள்ளி பரிபாலன சபை உறுப்பினர்கள்ää மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உள்ளிட்ட சிலரும் அதில் கலந்து கொண்டனர்.மேலும் நாவற்கேணி காணி என்பது 1974ம் ஆண்டு காலப்பகுதியல் நில அளவை திணைக்களத்தினால்  49ஏக்கர் 03றூட் 29பேர்ச் காணி அளவிடப்பட்டது. ஆனால் தொல் பொருள் திணைக்களத்திற்கு அக்காணி வழங்கப்படாது தொல்பொருள் திணைக்களத்திற்கான காணி என்பது இதுவரையிலும் இனங்காணப்படாத நிலையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்பிரதேசத்தில் 37 நிரந்த வீடுகள் கட்டப்பட்டு 65 பயனாளிகள் நிரந்தரமாக வசித்து வருகின்றார்கள் மேலும்; வயல் மற்றும் தோட்டக்காணிகளும் அவர்களுக்கு உள்ளன.இந்நிலையில் இன்றைய கூட்டத் தீர்மானங்கள் பின்வருமாறு.1.    மீண்டும் மாகாண காணி ஆணையாளர்ää தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள்ää பிரதேச செயலாளர்ää நில அளவையாளர்கள்ää காணி தொடர்பான உத்தியோகத்தர்கள்  உள்ளிட்ட அதிகாரிகள்  குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டு புதை பொருள் தொடர்பான பொருட்களை அடையாமிடுவதுடன் எல்லைகளை இனங்காணல்.2.     நிரந்தர குடியிருப்பாளர்களை தவிர்த்து ஏனைய வயல்காணிகளுக்குள் இருக்கும் புதைபொருளுக்கான எல்லைகள் இனங்காணப்பட்ட பின்னர் மிகுதிக்காணிகள் உரியவர்களிடம் ஒப்படைப்படைக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ப்பட்டு மீண்டும் இது விடயமாக குறித்த அதிகாரிகள் முதலமைச்சர் செயலகத்தில் ஒன்று கூட்டப்பட்டு இறுதித் தீர்மானங்கள் பொதுமக்கள் பாதிப்படையாத வகையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சரால் கூறப்பட்டன.(தகவல் : மாகாண சபை உறுப்பினர் ஊடகப் பிரிவு)
No comments:

Post Top Ad