பொத்துவில் உப –வலயக் கல்வி அலுவலகம் திறந்துந்துவைப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, August 13, 2014

பொத்துவில் உப –வலயக் கல்வி அலுவலகம் திறந்துந்துவைப்பு (படங்கள் இணைப்பு)(ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்)

உள்ளுராட்சிஇ மாகாண சபைகள் அமைச்சரும்இ தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் தீர்க்கதரிசனமான அபிவிருத்தி வழிகாட்டலில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களின் கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூவின மக்களும் வாழ்ந்து வருகின்ற பொத்துவில் பிரதேசத்திற்கான தனியான உப –வலயக் கல்வி அலுவலகம் வைபவரீதியாக மிகவும் கோலகலமாக திறந்து வைக்கப்பட்டது.


பொத்துவில் பிரதேச மாணவர்களின் சிறந்த கல்வி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை அதிபர்இ ஆசிரியர்களும் நிருவாக ரீதியான இலகுவான செயல்பாடுகளையும் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பைஇ பொத்துவில் தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ஏ.எம்.அப்துல் மஜீட் ஆகியோர்களின் முயற்சியின் பலனாகவே இந்த உப – வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச சபையின் எதிர்க்கட்சி தலைவரும்இ பொத்துவில் தொகுதி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எம்.அப்துல் மஜீட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றான இந்த உப – வலயக் கல்வி அலுவலகம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும்இஉள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஇ கிழக்கு மாகாண கல்விஇ காணிஇ காணி அபிவிருத்திஇ போக்குவரத்து மற்றும் கலாசார அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா ஆகியோர் கலந்து கொண்டு காரியாலயத்தினை திறந்து வைத்தனர்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திஇ நீர்ப்பாசனம்இ வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும்இமாகாண சபை அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பைஇ கிழக்கு மாகாண சுகாதாரஇ சுதேச வைத்திய துறைஇ சிறுவர் நன் நடத்தை பராமரிப்புஇ சமூக சேவைகள்இ கூட்டுறவு அபிவிருத்திஇ விளையாட்டுத்துறை இ தொழிற்பயிற்சி அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்இ சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர்இ ஏ.எல்.எம்.நஸீர்இ ஏ.எல்.தவம்இ கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரஇ மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம்இ உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் பொத்துவில் பிரதேச இணைப்பாளரும்இ பிரதேச சபை உறுப்பனருமான ஏ.பதுர்க்கான்இ பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.ஏ.வாஸீத்இ அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம்இ பொத்துவில் உப – வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.அப்துல் அஸீஸ் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்இ கல்விமான்கள்இ ஆசிரியர்கள் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.

உப கல்வி வலயம் திறந்து வைத்ததன் பின்னர் பொத்துவில் அல்- பஹ்ரியா வித்தியாலயத்தின் தரம் 06 தொடக்கம் தரம் 11 வரையிலான புதிய வகுப்புக்களும் ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வின் இன்னொரு விசேட அம்சமாகும். இதனைத் தொடர்ந்து அல்- பஹ்ரியா வித்தியாலயத்தில் பொதுக் கூட்டமும் இடம் பெற்றது.
No comments:

Post Top Ad