மன நோயாளிகள் போன்று ஜாதிக ஹெல உறுமய அறிக்கை விடக்கூடாது- காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, August 05, 2014

மன நோயாளிகள் போன்று ஜாதிக ஹெல உறுமய அறிக்கை விடக்கூடாது- காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவிப்பு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

ஜாதிக ஹெல உறுமயவினால் கடந்த மாதம் 31ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதுää அக்கட்சியின் தேசிய ஊடகச் செயலாளரும்ää மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த சிறி வர்ணசிங்க தெரிவித்திருந்த கருத்திற்குää காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றது.


இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களது கலாசாரத்தைப் பேணும் வகையில் அணிகின்ற ஹிஜாப் ஆடையை  கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டிருப்பதானதுää ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மத ரீதியாக அடக்குமுறைக்கு காரணமாக அமைகின்றது. குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்களது தலையை மூடி பாடசாலைகளுக்கம் பல்கலைக்கழகங்களுக்கும் செல்வதுää பிரிவினையை ஏற்படுத்துவதாக படுமுட்டாள்தனமான கருத்தை தெரிவித்திருப்பதுடன்ää கிழக்குமாகாண பாடசாலைகளில் முஸ்லிம் பெண்கள் அபாயாக்களுக்குள் விடைத்தாள்களையும்ää ஹிஜாபுக்குள் கைத்தொலைபேசிகளையும் வைத்து பரீட்சையில் சித்தியடைகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இது இந்நாட்டில் பொதுப்பரீட்சைகளை மிகக்கவனமாக முன்னெடுத்துச் செல்கின்ற பரீட்சைத் திணைக்களத்தினை அவமதிக்கின்ற அதேவேளைää எமது மாணவிகளின் திறமைகளை கொச்சைப்படுத்துகின்ற செயலாகவும் உள்ளது.

மேற்படி நிஷாந்த சிறி வர்ணசிங்க பின்பற்றுகின்ற பௌத்த மதம் வெறுக்கின்ற மதுää சூதுää விபச்சாரம் மற்றும் கெசினோ போன்றவற்றை எல்லாம் தடுக்க வக்கில்லாமல் இருக்கின்ற ஜாதிக ஹெல உறுமய முஸ்லிம்களின் கலாசாரத்தின் மீது கைவைப்பது அநாகரிகமான செயலாகும்.

தேர்தல் காலங்களில் முஸ்லிம் சகோதரிகள் தங்களது முகத்தை மூடி வாக்களிப்புக்குச் செல்லக்கூடாது என்பது தேர்தல் ஆணையாளரின் ஒரு கருத்தாக இருந்தாலும்ää அது இன்னொரு சமூகத்துக்குக் கிடைத்த வெற்றியாக ஜாதிக ஹெல உறுமய கருதுவது மடமையிலும் மடமையாகும்.
எனவேää இந்த நாட்டின் இன ஒற்றுமைக்கும் சகவாழ்வுக்கும் குந்தகம் விளைவிக்கின்ற இவ்வாறான முட்டாள்தனமான கருத்துக்களை ஜாதிக ஹெல உறுமய இனிமேலும் வெளியிடுவதை தவிர்ந்துகொள்ள வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கேட்டுக்கொள்கின்றது என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் சுபைர் ääசெயலாளர் சபீல் நளீமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad