26 ஆவது இளைஞர் மாவட்ட சம்பியனாக அட்டாளைச்சேனை தெரிவு - (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, August 05, 2014

26 ஆவது இளைஞர் மாவட்ட சம்பியனாக அட்டாளைச்சேனை தெரிவு - (படங்கள் இணைப்பு)
(ஏ.ஜ.ஹஸ்ஸான் அஹமத்)

அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 26 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழா அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாரை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. சிசிரகுமார தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்திஇ நீர்ப்பாசனம்இ வீடமைப்பும் நிர்மாணமும்இ கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அமைச்சருடன் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சிரியானி விஐயவிக்ரமஇ தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு பாலசுரியஇ முன்னால் கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு பி.செல்வநாயகம்இ இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும்இசபை முதல்வருமான யு.எல்.முகம்மட் சபீர்இ உட்பட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அம்பாரை மாவட்டத்திலுள்ள இளைஞர் கழகங்களின் பிரதிநிதிகள் மற்றும் வீரர்களும் கலந்து கொண்டனர்.

இளைஞர் கழகங்களுக்கிடையிலான மாவட்ட விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் கழகம் சம்பியனானதுடன்இ தெஹியத்தக்கண்டி பிரதேச செயலக கழகம் 02ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.


No comments:

Post Top Ad