உண்­மை­யான பயங்­க­ரா­வா­திகள் யாரென்­பதை அமெ­ரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும் ! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 02, 2014

உண்­மை­யான பயங்­க­ரா­வா­திகள் யாரென்­பதை அமெ­ரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும் !

அமெ­ரிக்­கா­விற்கு விஜயம் மேற்­கொள்­ளு­வ­தற்­காக எனக்கு வழங்­கப்­பட்ட விசா ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­மை­யா­னது பெரிய விட­ய­மல்ல எனத் தெரி­வித்த பொது பல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், உண்­மை­யான பயங்­க­ரா­வா­திகள் யாரென்­பதை அமெ­ரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும் என்றும் தேரர் தெரி­வித்தார்.
பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் அமெ­ரிக்­கா­வுக்கு செல்­வ­தற்­காக திறந்த விசா 2011ம் ஆண்டு வழங்­கப்­பட்­டது. இவ் விசா ஐந்து ஆண்­டு­க­ளுக்கு பாவிக்கக் கூடி­ய­தா­கவே வழங்­கப்­பட்­டது.
இந்த விசாவை பயன்­ப­டுத்தி அவ் ஆண்டு அமெ­ரிக்­காவின் இந்­தி­யானா பகு­தியில் பல விகா­ரை­க­ளுக்கு ஞான­சார தேரர் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த விசாவே ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது
கடந்த வெள்ளிக்­கி­ழமை இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்க தூத­ரக அதி­கா­ரிகள் தம்மை அழைத்து அமெ­ரிக்கா இராஜாங்கத் திணைக்­களம் வீசாவை ரத்து செய்­துள்­ள­தாக அறி­விக்க சொன்­ன­தாக தூத­ரக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ள­தாக ஞான­சார தேரர் தெரி­வித்தார்.
இது தொடர்­பாக நான் பெரி­தாக அலட்டிக் கொள்­ள­வில்லை. இங்கு இயங்கும் முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களின் தூண்­டு­தலே இதற்கு கார­ண­மாக இருக்கும்.
பயங்­க­ர­வா­திகள் யாரென்­பதை அமெ­ரிக்கா விரைவில் புரிந்து கொள்ளும்.
பௌத்­தர்கள் பயங்­க­ர­வா­திகள் அல்ல, அஹிம்­சை­வா­திகள் என்பதை அமெ­ரிக்கா இராஜாங்க திணைக்­க­ளத்­திற்கு தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம் என்றும் ஞான­சார தேரர் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad