தலைப்பாகை இல்லா தலைமைத்துவங்கள்..! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 03, 2014

தலைப்பாகை இல்லா தலைமைத்துவங்கள்..!
(ஸூஹைர்)

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சி அமைப்புகள் தனித்தனியாக இருக்கிறது. இன்று பெரும்பானமையான நாடுகள் மக்களாட்சி எனும் ஜனநாயக முறைக்குள் வந்து விட்டன. இந்த ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படுகிறது. சில நாடுகளில் மன்னராட்சி முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில நாடுகளில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்தி இராணுவ ஆட்சிகளும் நடைபெற்று வருகின்றன.


ஜனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள்இ தங்களின் கருத்துக்களைத்தேர்தலின் மூலம் பதிவு செய்துஇ தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத்இ பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர்.

நாட்டை ஆட்சி செய்வதற்குச் சட்டதிட்டங்கள் அவசியமானவை. அது போன்று சகலருக்கும் பொதுவான சட்ட ஒழுங்கொன்று செயற்படல் சட்டத்திற்குக் கீழ்ப்படிவுள்ள சமூகமொன்று உருவாகுவதற்கு அடிப்படையாக அமையும். சட்டத்தின் கீழ்ப்படிதல்இ நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியன மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளாகும். சமூகப் பாதுகாப்புஇ சமூக முன்னேற்றம் என்பன நீதிமன்றங்கள் சுதந்திரமாகச் செயற்படுவதிலும் மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலுமே தங்கியுள்ளன.

மக்களாட்சியில் பிரதேச மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை ஆட்சி நிர்வாகத்தை நடாத்துவதற்காக பிரதிநிதிகள் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் முக்கிய பணி தேசிய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஆட்சியை மேற்கொள்வதாகும். தலைவர்கள் நேர்மையாகவும்இ அர்ப்பணிப்புடனும் பொறுப்பு வாய்ந்த விதத்திலும் செயற்படுவதே மக்களின் எதிபார்ப்பாகும். அத்துடன் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும்இ தேசிய அபிவிருத்திக்கும் காரணமாகலாம.
ஒரு தலைவனாக இருக்க முதலில் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்துகேட்கும் தன்மை முதலில் இருக்க வேண்டும். அதனால்தான் இரண்டு காது இ ஒரு நாக்கு கொடுத்திருக்கிறான் இறைவன் என்ற சொல்லே இருக்கிறது.

தலைமத்துவ குணங்களில் முக்கியமானவை: தனிப்பட்ட விறுப்பு வெறுப்பு இல்லாமல் எந்த மனிதரையும் எந்த பிரச்சினையும் அனுகுகுவது. எப்போது தனிப்பட்ட விறுப்பு ஃ வெறுப்பு இருக்கிறதோ அதற்கு தகுந்தாற்போல் தீர்ப்பும் இருக்கும். பிரச்சினைகளின் தீவிரத்தை கண்டுபிடித்து அதற்கு தகுந்தாற்போல் சிந்திப்பதுதான் நல்லது.

இன்னும் மிகச்சிறந்த தலைமைத்துவங்களில் ஒன்றுஇ தனக்கு பின்னும் இன்னொருவர் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மற்றவருக்கு பயிற்சிதருவது.
‘ உன்னை திருத்து உலகம் திருந்தும்' தலைமைகள் வளர்க்கப்பட வேண்டும் வெறுமெனே தான் மத்திரம்தான் தலைவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்காமல் நாளு தலைமைகளை உருவாக்க வேண்டும் அந்த வகையில்தான் முஹம்மத் நபி (ஸல்) அலை அவர்களுக்குப் பின்னால் தலைமை பொறுப்பை எட்பபதட்கு நாட் பெரும் கலீபாக்களை உருவாக்கி இருந்தார்கள் எங்கு தலைமத்துவம் சீர்குலைகிறதோ அங்கு அனைத்தும் சீர் கெட்டுப் போகும்.இலங்கை முஸ்லிம்களுக்கான கூட்டு தலைமத்துவம் இன்னும் செதுக்கப்படவில்லை என்பதனை சமகால நிகழ்வுகள்  சொல்கின்றன.

அதே போன்று இலங்கையுடனான இஸ்லாமிய இ இராஜ தந்திரஇஅரசியல் உறவுகள் அன்றும் இருந்தே வந்திருக்கின்றன அதட்கான சன்ரு நிறையவே இருக்கின்றன உதாரணமாக ஓராபி பாஷாஇஇப்னு பதூதா போன்றோர்கள் வருகை- இஸ்லாம் பரவியமை எனலாம்.


இத்தகைய இஸ்லாமியரின் அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும்இ பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவைஇ அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர்இ நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

அதுவரை சோழ - பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும்இ கல்வெட்டுகளிலும்இ சோனகர் - துலுக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள்இ தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும்இ அரசியல் முதன்மையையும் எய்தினர்.
நம் தலைவர்கள்இமுன்னோர் நம்முடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்குஇமுக்கியமாக துருக்கி மற்றும் தென் இந்திய போன்ற நாடுகளுடன் இராஜ தந்திர இஸ்லாமியஇஅரசியல்உறவுகளை வளர்த்துக் கொள்ளவில்லை.இஸ்லாம்இ தமிழகத்தில் முதன் முதலாகப் பரவிய காலத்தில் (கி.பி. 650-750) சமண மதம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருந்தது;தமிழகத்தில் இஸ்லாமும்இதலைமத்துவமும்  பரவுவதற்கு எவ்வித முட்டுக்கட்டைகளும் இருக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இஸ்லாம் மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வை கற்பிக்காததால் சமணர்களும் பௌத்தர்களும் அந்த மார்க்கம் பரவுவதை எதிர்க்கவில்லை என்றும் கேரளாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்கள் இருவரும் குறிப்பிடுகிறார்கள்இஇவ்வாறு இஸ்லாமிய தலைமைத்துவங்களின் வழிகாட்டலினால் தென் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் நிலைநாட்டியது
சுருங்க கூறின் இன்னும் எமக்கான இஸ்லாமிய உறவுகள் உலகளாவிய ரீதியில் பேணப்படத்மை இன்னுமொரு பின்னடைவகும் ஆக சமூகஇஅரசஇஇஸ்லாமிய அமைப்புக்கள் குறிப்பாக துருக்கிஇஇந்திய போன்ற பலம் வாய்ந்த நாடுகளுடன் தொடர்பினை பலப்படுத்திக் கொள்ள முயல வேண்டும்

மறை உலக உண்மைகளை சிலர் ஆராயப் புகுந்து வழி பிறழ்வுகலையும்இசீர்கேடுகளையும் மனிதர்களுக்கு மத்தியில் கருத்து குழப்பங்களையும் உருவாக்கி  பல பிரிவுகளை உண்டாக்கின இப்ராஹிம் அலை அவர்களின் பிரார்த்தனயின் விளைவே இப்புதிய சமூகம் அது வெறி உணர்வு கொண்டு தனி இனக் குழுவாக பிரிந்து நீட்கும் சமூகம் அல்ல அது எல்லா நபிமார்களையும் வேதங்களயும் ஏற்றுக் கொள்ளும் விரிந்த மனப்பன்குள்ள சமூகம்.

No comments:

Post Top Ad