இலங்கையின் மூன்றாம் தரப்பினர் உலகில் முதலாம் தரப்பினர் என்பதை ஏனைய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் ! மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 05, 2014

இலங்கையின் மூன்றாம் தரப்பினர் உலகில் முதலாம் தரப்பினர் என்பதை ஏனைய சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் ! மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனது ஊடக அறிக்கையில் பலமான சமூகம் பலயீனமான சமூகத்தை பாதுகாக்க தவறினால் அவர்களும் பலயீனமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் கடந்த சில மாதங்களாக முஸ்லிம் சமூகத்தின் மீது இடம்பெற்று வரும் மதகலாச்சாரம் பொருளாதார ரீதியில் திட்டமிட்டு பேரினவாதிகளால் அழிக்கப்படும் செயற்பாடானது இந்நாட்டு முஸ்லீம்களுக்கு மாத்திரமல்ல நாட்டில் வாழ்கின்ற அனைத்து சமூகங்களுக்கும் பேரிழப்பு என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்


நாட்டின் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அரசுக்கு உலகமே புகழாம் பாடியது இன்னும் வல்லரசுகளால் கூட பயங்கரவாத்ததை முடிவு என்ற எல்லைக்குள் கொண்டுவர முடியாத நிலையில் இலங்கை சற்று முன்னேறிய நிலையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் இனரீதியான சமூக ஒற்றுமை வளர்க்கப்பட நிலையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் சாங்கங்கள் தர்ஹா நகர் அழுத்கம சம்பவத்தினூடாக மறைக்கப்பட்டு மீண்டும் சர்வதேசரீதியில் உயிர் பெற்றிருப்பது என்பது இந்த நாட்டில் கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கை சமூக நல்லிணக்கம் என்பன பற்றி சர்வதேச சமூகம் உணரும் அளவுக்கு பொதுபல சேனாவின் இனரீதியான நடவடிக்கை சர்வதேசரீதியாக இலங்கைக்கு இருந்த நன்மதிப்பை குறைந்துகொண்டு வந்த நிலையில் மீண்டும் பேரினவாதம் மேலோங்கச் செய்கின்றது என்பதுதான் ஒரு தெளிவான நிதர்சனம்

கடந்த காலங்களில் ஆயுத கலாச்சாரத்திலும் பாதிக்கப்பட்ட எமது சமூகம் இன்று பொதுபல சேனா என்ற அமைப்பினால் நசுக்கப்படுவது யுத்தகாலத்தில் எமது சமூகத்தின் மத்தியில் இருந்த அமைதிப்போக்கை விட ஒரு பயங்கரமான தூக்கத்திலிருந்து விழிப்பது போன்ற நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டுள்ளது.

இன்று பாக்கும்போது அன்று வடகிழக்கில் மிக மோசமான ஒரு கொடூர யுத்தத்தை சந்தித்த நாம் வட கிழக்கிற்கு அப்பாலுள்ள ஏனைய மாகாணங்களில் இனரீதியான மோதல்களை சந்திப்பது என்பது நடந்து முடிந்த யுத்தத்தைவிட மாற்று செயல்ரூபமாக இருண்ட எதிர்காலத்தை நோக்கி நகர்வதாக உணரமுடிகின்றது

இந் நாட்டிற்கும் அரசுக்கும விசுவாசமாக இருந்த முஸ்லீம் சமூகம் இற்றைவரைக்கும் தம்முடைய நிலைப்பாட்டிலிருந்து மாறாத நிலையில் குறித்த சமூகத்தின் மீதான தாக்குதல் என்பது மீண்டும் இனக் கலவரத்தை தூண்டி நாட்டிற்கு அவபெயரையும் சமூகங்களுக்கிடையிலான ஒரு திட்டமிட்ட சதி என்பதற்கு ஒரு இயக்;கமாக பயன்பட்டு வருகின்ற பொதுபல சேனாவின் நோக்கம் என்பது தெளிவாக புலனாகிறது

குறித்த சமூகம் சிறுபான்மையின் காரணமாக மூன்றாம் தரப்பு என்பதன் கருத்துக்கு தர்ஹா நகர் அழுத்கம் சம்பவத்தினூடாக சர்வதேசரீதியில் முஸ்லீம் மற்றும் ஏனைய நாடுகளில் மக்கள் எதிரப்பு ஆர்ப்பட்டத்தின் போது இங்குள்ள ஏனைய சமூகங்கள் இலங்iயில் மட்டும்தான் முஸ்லீம்கள் மூன்றாம் தரப்பினர் சர்வதேச ரீதியில் இவர்கள் முதலாம் தரப்பினர் மட்டுமன்றி பெரும்பாண்மையைக் கொண்டவர்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டிய சந்தர்ப்பம் ஏற்ப்பட்டிருப்பதை இனியும் உணராவிட்டால் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் மீதான அடக்கு முறை உலகளாவிரீதியில் விடுதலைப் போரட்டமாக மாறுவதற்கு பல உதாரணங்கள் காட்டப்பட்ட சம்பவம் ஒரு தெளிவான உண்மை

சுமூக நல்லிணக்கத்தை குழப்புகின்ற இனரீதியான கும்பலை தெளிவாக இனங்காண்பட்ட நிலையில் அவர்களுக்கெதிரன சட்ட நடவடிக்கை என்பதை சர்வதேச சமூகம் இன்று அழுத்திச் சொல்லிக் கொண்டிருப்பதை ஆட்சியாள்கள் கவனத்தில் எடுத்து முடிவுக்கு கொண்டுவருவதனூடாக மீண்டும் ஒரு சுபீட்சமான இலங்கையை கட்டி எழுப்பலாம்.

(மா.சபை உறுப்பினர் அன்வரின் ஊடகப்பிரிவு)

No comments:

Post Top Ad