இஸ்லாமிய அரசின் அளிஃப்,லாம் தெரியா முஸ்லிம் தலைமைகள் ..!! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, July 20, 2014

இஸ்லாமிய அரசின் அளிஃப்,லாம் தெரியா முஸ்லிம் தலைமைகள் ..!!

(ஸூஹைர் அலி)

அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும்இ அரசியல் உண்மையில் அலுவலகஇ கல்விஇ மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழு ஊடாடல்களிலும் காணப்படுகின்றது.


இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் ஹஸ்ரத் உஸமான் (றழி) அவர்களின் இருதிக் காலப்பகுதியைத் தொடர்ந்து குழப்ப நிலைகள் அதிகரித்துச் சென்றன. அப்துல்லாஹ் பின் ஸபா போன்ற தீய சக்திகளது நடவடிக்கைகள் காரணமாக 'ஜமல்' 'ஸிப்பீன்' போன்ற குழப்பங்களும் ஏற்பட்டன. அலி (றழி) அவர்களுக்கும் முஆவியா (றழி) அவர்களுக்குமிடையில் வளர்ச்சியடைந்த சென்ற முறன்பாடுகளும் முஸ்லிம்கள் மத்தியில் பல பிரிவுகள் ஏற்படுவத்றகு காரணங்களாக அமைந்தன.

தங்களை ஒரு தனித்துவமான பிரிவாக அடயாளங் காட்டிக் கொண்டு காரிஜீக்கள் பிரிந்து சென்றனர். அலி (றழி) முஆவியா (றழி) அம்ருப்னில் ஆஸ் (றழி) போன்றவர்கள் பெரும்பாவங்களைப் புரிந்துள்ளனர் என்றும் அவர்களை கொலை செய்ய வேண்டும் என்றும்இ பெரும்பாவங்களை செய்தவர்கள் காபிர்கள் என்றும் தாம் அல்லாத அனைவருமே காபிர்கள் என்றும் அவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்றும் கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டு ஓர் அரசியல் சக்தியாக இவர்கள் தொழிட்பட்டனர்.

மறுபுறத்தில் இன்னொரு பிரிவினர்; அலி (றழி) அவர்களின் குடும்பத்திற்கு கூடுதலான மதிப்பளித்து அலியை தெய்வப்பிறவி என்று புரிந்து கொண்டு செயல்படத் தொடங்கினர். இவ்விரு பிரிவுகளையும் சாராது இன்னொரு பிரிவினர் அல்குர்ஆன்இ சுன்னாவின் முடிவுகளில் தங்கி நின்றனர்.

உண்மையில் அரசியலும் அரசியல் சாசனமும் 6ஆம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டுஇ வெற்றிகரமாக நடைமுறையும்படுத்தப்பட்டுஇ உலகின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்த பெருமை இஸ்லாமிய அரசியலுக்கு உண்டு. அதை இறைவனின் ஆணையின்பேரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிஇ அன்றைய நவீன அரசாட்சி முறையை உலகுக்கு எடுத்திக்காட்டினார்கள்.

ஹார்ட் சொன்னார்: நூறு உலகத் தலைவர்களில் முதலாமவர் முஹம்மத். ஏனெனில்இ சமயம்இ உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒருசேர மகத்தான வெற்றி பெற்றவர்இ வரலாற்றில் அவர் அவர் ஒருவரே. அன்றைய உலகத்தின் பெரும் மதங்களில் ஒன்றின் தலைவர்; பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவர்.

‘‘என் இறைவா! என்னைத் திருப்தியான முறையில் நுழையச்செய்வாயாக! என்னைத் திருப்தியான முறையில் வெளியேறச்செய்வாயாக! உன்னிடமிருந்து எனக்கு உதவும் ஒரு சக்தியை வழங்கிடுவாயாக! (17:80)

திருமறை விரிவுரையாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தமது ஓரிறை அழைப்புப் பணியில் ஆட்சியதிகாரத்தின் துணையின்றி எதையும் சாதிக்க முடியாது என்பதை அறிந்திருந்தார்கள். எனவேஇ இறைமார்க்கத்தை நிலைநாட்டுவதற்குத் துணைபுரியும் ஒரு சக்தியை -அதாவது ஆட்சி அதிகாரத்தைத்- தமக்கு வழங்குமாறு இறையிடம் வேண்டினார்கள்.

ஆட்சியதிகாரம் என்பதுஇ இறைவனின் அருட்கொடையாகும். அது இல்லை என்றால்இ மனிதர்களில் சிலர் வேறுசிலரைத் தாக்கி அழிப்பார்கள்; வலிமை மிக்கவன் பலவீனமானவனை விழுங்கிவிடுவான்.

முற்காலத்தில்இ இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்கள் பெரும் ஆட்சியாளராக விளங்கினார்கள். அவர்களின் புதல்வர் நபி சுலைமான் (அலை) அவர்கள் பேரரசை நிறுவி ஆண்டார்கள். யூஷஉ பின் நூன் (அலை) அவர்களின் தலைமையில் அமாலிக்கர்களை இஸ்ரவேலர்கள் வென்றனர். நபி யூசுஃப் (அலை) அவர்கள்இ தம் சகோதரர்களின் துரோகத்திற்குப் பின்பு எகிப்தின் ஆட்சியில் அமர்ந்தார்கள்.

இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும்போதே மக்காஇ கைபர்இ பஹ்ரைன் உள்ளிட்ட அரபு தீபகற்பம் முஸ்லிம்களின் கைக்கு வந்துவிட்டது. பலர் காப்புவரி செலுத்தினர். கிழக்கு ரோமானியப் பேரரசர் ஹிரக்ளீயஸ்இ எகிப்து ஆட்சித் தலைவர் முகவ்கிஸ்இ அபிசீனிய மன்னர் நஜாஷீ (நீகஸ்) ஆகியோர் நபியவர்களை மதித்து அன்பளிப்புகளை அனுப்பிவைத்தனர்.

நபிகளாரின் மறைவுக்குப் பிறகு கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சியில் பாரசீகத்தின் சில பகுதிகள்இ ஷாமின் (சிரியா) டமாஸ்கஸ்இ புஸ்ரா ஆகிய நகரங்கள் வெற்றிகொள்ளப்பட்டன.

கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்துஇ பாரசீகம்இ கிழக்க ரோம் (பைஸாந்தியா) ஆகியவை வீழ்ந்தன. பாரசீகப் பேரரசன் குஸ்ரூ (கிஸ்ரா)இ கிழக்கு ரோமானியப் பேரரசன் சீசர் (கைஸர்) ஆகியோர் அதிகாரத்தை இழந்தனர்.

கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமியப் பேரரசுஇ கிழக்கு மற்றும் மேற்கு எல்லைவரை விரிவடைந்தது. மேற்கு நாடுகள் அதன் கோடிவரை வெற்றிகொள்ளப்பட்டன. தெற்கு ஸ்பெயினில் உள்ள அண்டலூசியா (உந்துலுஸ்)இ சைப்ரஸ் (கப்ரஸ்) ஆகியவை அவற்றில் அடங்கும்.

மத்திய தரைக்கடல் பகுதியை ஒட்டியுள்ள லிபியாவின் சிரநேயிக்கா (கைரவான்)இ செப்டர் (தாவூடா) ஆகிய நகரங்களும் கிழக்கில் சீனா எல்லைவரையும் முஸ்லிம்கள் கரத்தில் வந்தன. இராக்கின் பல நகரங்களும் ஈரானின் குராசான்இ அஹ்வாஸ் ஆகிய நகரங்களும் வெற்றிகொள்ளப்பட்டன. துருக்கியரின் ஏகாதிபத்தியம் முடிவுக்கு வந்தது. (தஃப்சீர் இப்னு கஸீர்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில்இ அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள்; உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள்; அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில்இ நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்; உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள்; அவர்கள் உங்களைச் சபிப்பார்கள். (முஸ்லிம்)

நபி ஸல் அவர்கள் மூஆயிரம் பேர் கொண்ட ஒரு படையை தயார் செய்து சைத் தலைமையில் அனுப்பி அங்கு சைத் கொல்லப்படுவராயின் அவரது இடத்தை ஜவ்பர் பெறுவது எனவும் மூன்றாவதாக அப்துல்லாஹ் இப்னு ராவாஹா குறிக்கப்பட்டார் இவ் மூவரும் வீழ்த்தப்படுமாயின் உங்களுள் ஒருவரை தலைவரக தேர்ந்து எடுக்கட்டும்.

இப்படி அழகான திட்டமிடல்இமுன் ஏட்பாடு போன்ற விடயங்களை சொல்லி வழி நடத்தி தம் வாழ்விலும்இதான் இல்லாத போதும் உம்மத்தை வழி நடத்த நல்ல தலைமத்துவங்கள் வேண்டும் என்ற எண்ணமும்இ புத்தி கூர்மயும் இருந்தது.
ஆனால் இன்றய அரபு உலகமும்இஇஸ்லாமிய அரசியல்வாதிகளின் பிட்போக்கினால் இலங்கை முதல் காசா வரை எமது சகோதரர்கள் படும் அவஸ்தை எண்ணிலடங்காதவை.

(நபியே!) வேதத்திலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர் - நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள்.(04:44)

இன்று துருக்கி பாராளுமன்றத்தின் 300 அங்கத்‌த்தவர்கள் வீதியில் இறங்கி காசா மக்களுக்கு குரல் கொடுத்தமை எம் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கொரு நல்லதொரு பாடம் என்று சொல்லலாம. ஆக மொத்தத்தில் சுருங்கக் கூறின் நாம் சிறு சிறு பிரிவுகளாக பிரிந்து செல்வதனலதான் இன்னும் நமக்கு தோல்வி அதிகரிக்கின்றன.

இன்றைய கால கட்டத்து அப்துல்லாஹ் இப்னு சபா போன்ற தீய சக்திகளை ஒழிக்க நம் இஸ்லாமியஇஅரபுலக தலைவர்கள் முன் வர வேண்டும. இஸ்லாமிய தலைவர்களின் வழித் தோன்றலில் வந்த நாம் அரசாட்சி முறைமை எங்கோ ஒழிந்து கிடக்கின்றன எமக்குள் இன்னும் மௌனம் வேண்டாம் தொடருங்கள் உங்கள் பயணத்த்தை..


with best regards,

Zuhair Ali -(Ghafoori,EDM,Reading PGD)

Columnist, Blogger, Independent Socio-Political writer, Internet activist & Freelance writer.
former employee of Embassy of the State of Qatar-Sri Lanka.

No comments:

Post Top Ad