குருக்கல்மட குழிகளை தோண்டுவதற்கான நீதிமன்ற ஆணை கிடைக்கப்பெற்றது எமக்கு கிடைத்த முதலாவது வெற்றி- காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, July 08, 2014

குருக்கல்மட குழிகளை தோண்டுவதற்கான நீதிமன்ற ஆணை கிடைக்கப்பெற்றது எமக்கு கிடைத்த முதலாவது வெற்றி- காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர்(பழுலுல்லாஹ் பர்ஹான்;)

குருக்கல்மட குழிகளை தோண்டுவதற்கான நீதிமன்ற ஆணை கிடைக்கப்பெற்றது எமக்கு கிடைத்த முதலாவது வெற்றி என காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

1990ம் ஆண்டு 07 ஆம் மாதம் 12 ஆம் திகதி குருக்கல்மடத்தில் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் புதைகுழிகளை கண்டறிந்து அதனைத்தோண்டி எடுப்பது சம்பந்தமாகவும்ää அதனைத் தொடர்ந்து இது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கு எல்லா வகையிலும் ஒத்தாசை வழங்குவது சம்பந்தமான ஓர் ஆலோசணையை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  நகரசபை ஆளும் தரப்பு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இதனடிப்படையில் இவருடைய எல்லா வகையான முயற்சிகளுக்கும் நான் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றேன்.

முதன் முறையாக காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டதட்கிணங்க பொலிஸ் முறைப்பாடு ஒன்றினை 2014 மார்ச் மாதம் 05ம் திகதி நேரடியாகச்சென்று எழுத்து வடிவிலான முறைப்பாடு ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்ääமட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்ääகளுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்ääகாத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிää களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு சமர்ப்பித்திருந்தேன்.

அதே நேரம் நேரடியாக கொழும்புக்குச்சென்று காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தேன்.

இம்முறைப்பாட்டினை தொடர்ந்து இது சம்பந்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக 25.03.2014 அன்று திகதியிடப்பட்டு  பொது பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அனுப்பப்பட்ட கடிதப்பிரதி ஒன்றும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது எமது சமூகத்தினுடைய உணர்வு சார்ந்த விடயம் என்பதால் மிகவும் பக்குவமாக கையாள வேண்டும் என நினைக்கிறேன்.

அது மட்டுமல்லாது கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டும் என்று காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கேட்டுக்கொண்டதட்கிணங்க பல சகோதரர்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி முறைப்பாட்டினை செய்திருந்தார்கள்.

இதனடிப்படையில் நானும் என்னுடைய கடத்தப்பட்ட உறவினர்களின் சார்பாக முறைப்பாடு ஒன்றை செய்திருக்கின்றேன்.

இந்த முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நீண்ட கால முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் முகமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 18ம் திகதி இந்தப்புதை குழிகளை தோண்டுவதற்கான நீதிமன்ற ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது இது அல்லாஹ்வின் உதவியோடு எமக்கு கிடைத்த முதலாவது வெற்றி என நினைக்கின்றேன் என  காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் அஸ்பர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad