காத்தான்குடி ஜமாஅதே இஸ்லாமி கிளையின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 02, 2014

காத்தான்குடி ஜமாஅதே இஸ்லாமி கிளையின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு.(படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

(எஸ்.எப்.ஆர்.டி) இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவின் அனுசரனையில் காத்தான்குடி மஸ்ஜிதுல் மர்யம் பள்ளிவாயலில் புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வொன்று 30-6-2014 திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.


காத்தான்குடி ஜமாஅதே இஸ்லாமி கிளையின் சமூக சேவை பிரிவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் (நாஸீம்) எம்.எம்.எச்.எம்.இப்றாஹீம் தலைமையில் இடம்பெற்ற இவ் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது நோன்பை திறந்தனர்.

இதன் போது றமழான் தொடர்பான விஷேட மார்க்க சொற்பொழிவை காத்தான்குடி மஸ்ஜிதுல் மர்யம் பள்ளிவாயலின் பேஷ் இமாம் எம்.எம்.பாஹீம் (பலாஹி) நிகழ்த்தினார்.

இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் சமூக சேவை பிரிவு காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad