முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் ! தலாய் லாமா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, July 07, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் ! தலாய் லாமா


இலங்கையிலும் மியன்மாரிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும் என்று திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா கோரியுள்ளார்.
தமது 79வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் ஆற்றிய உரையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இந்திய காஷ்மீரில் உள்ள இடம் ஒன்றில் வைத்து ஆயிரக்கணக்கான தமது ஆதரவாளர்கள் மத்தியில் தலாய் லாமா உரையாற்றினார்.
இலஙகையில் பௌத்தர்கள், முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றமையானது ஏற்கத்தக்கதல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
புத்தபகவானின் சிலைக்கு முன்னால் நின்று பௌத்தர்கள் இந்த வன்முறைகளை மேற்கொள்வதை போன்ற தோற்றத்தை நினைத்துப் பார்க்கவேண்டும் என்று தலாய் லாமா குறிப்பிட்டார்.

No comments:

Post Top Ad