அளுத்கம , பேருவளை சம்பவங்கள் தொடர்பாக ஹக்கீமிடம் விசாரணை செய்ய வேண்டும் ! ஞானசார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 05, 2014

அளுத்கம , பேருவளை சம்பவங்கள் தொடர்பாக ஹக்கீமிடம் விசாரணை செய்ய வேண்டும் ! ஞானசார

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்கள் தொடர்பாக தன்னிடம் மாத்திரம் விசாரணை நடத்தியது அநீதியானது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக சர்வதேசத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம் தலைவர்களிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு முன்னால் அழுது புலம்பியவாறு சர்வதேசத்திற்கு திரிபுபடுத்தப்பட்ட தகவல்களை வழங்கினார் எனவும் அடுத்த தேர்தல்களில் வாக்குகளை பெறும் நோக்கில் அவர் அவ்வாறு செயற்பட்டதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
ஆறு மணி நேரத்திற்கு மேலாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்திய போதிலும் 12 கேள்விகளை மாத்திரமே தன்னிடம் கேட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad