கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும். - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 18, 2014

கல்முனை ஸாஹிரா பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்.கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் புனித ரமழான் மாத ஒன்று கூடலும் இப்தார் நிகழ்வும்  மிக சிறப்பான முறையில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இவ்வருடமும் இரண்டாவது தடவையாக நடைபெறும் இந்நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி ஜூலை மாதம் திங்கள் கிழமை வெள்ளவத்தை மெரைன் வீதியில் அமைந்துள்ள மெரைன் கிரான்ட் வரவேற்பு மண்டபத்தில் மாலை 5.30 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

கொழும்பு வாழ் எமது கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்படுகின்றனர். இந்நிகழ்வில் உறுதியாக கலந்து கொள்ள விரும்பும் பழைய மாணவர்கள் தங்கள் பெயர்களை 0772 987 367 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு குறுந்தகவல்(ளுஆளு) ஒன்றினை அனுப்பி வைப்பதன் மூலம் முன் கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும்.

இந்நிகழ்வில் வைத்து தங்களது அங்கத்துவத்தினை பெற்றுக் கொள்ளவோ அல்லது புதுப்பித்துக் கொள்ளவோ முடிவதுடன் கல்லூரியின் ஞாபகார்த்த சின்னங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post Top Ad