முஸ்லிம் மக்கள் நாட்டின் பாதியை ஒரு போதும் கேட்டது கிடையாது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, July 03, 2014

முஸ்லிம் மக்கள் நாட்டின் பாதியை ஒரு போதும் கேட்டது கிடையாதுபேருவளை, அளுத்கம சம்பவம் ஓர் சர்வதேச திட்டமென்றே கருதுவதாக கொழும்பு மாநகரசபையின் மேயர் ஏ.ஜே.எம். முஸாமில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இனப்பிரச்சினையை தூண்டும் வகையில் இவ்வாறான சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கிலிருந்த முஸ்லிம்களை 24 மணித்தியாலத்திற்குள் பிரபாகரன் விரட்டியது ஏன்? முஸ்லிம் மக்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்காமையே இதற்கான காரணமாகும்.
முஸ்லிம் மக்கள் நாட்டின் பாதியை ஒரு போதும் கேட்டது கிடையாது.
கொழும்பு நகரில் அனைத்து மக்களும் வாழக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.
கொழும்பில் அதிகளவில் பௌத்தர்களே வாழ்ந்து வருகின்றனர். சிங்களவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், முஸ்லிம்கள் சிங்கள அரசியல்வாதிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இன்று முஸ்லிம் மக்கள் சிறிய குழுவொன்றில் பிடியில் சிக்கியுள்ளனர். 30 ஆண்டுகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோம்.
அரந்தாலாவையில் பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டார்கள், காத்தான்குடியில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் வெட்டிக்கொல்லப்பட்டனர்.
எனினும், முஸ்லிம்கள் பிரிவினைவாதத்திற்கு ஆதரவளிக்கவில்லை. கருணா அம்மானை அலி சாஹிர் மௌலானாவே கொழும்பிற்கு அழைத்து வந்தார்.
சர்வதேச சமூகத்தில் முஸ்லிம் நாடுகளே இலங்கைக்கு ஆதரவளிக்கின்றன. இவ்வாறான ஓர் நிலையில் ஏன் முஸ்லிம்கள வெறுக்கப்படுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் கொழும்பு நகரசபையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது முஸாமில் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad