அளுத்கம வன்முறையில் கொல்லப்பட்டோர் துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டனர் ! ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, July 08, 2014

அளுத்கம வன்முறையில் கொல்லப்பட்டோர் துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டனர் ! ஹக்கீம்

அளுத்தக பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக நீதியமமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் தர்கா நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக தாம் கலந்துரையாடல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது வன்முறை நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி தோட்டாக்களை பொலிஸார் கண்டெடுத்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியமை தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் சர்ச்சை இருந்ததாக அவர் குறிப்பிட்டார். உயிரிழந்த ஒரு நபரின் பிரேத பரிசோதனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அளுத்கம வன்முறைச் சம்பவங்களை முழுமையாக மாற்றியமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கைக் சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

No comments:

Post Top Ad