அனைத்துப் பள்ளிவாசல்களின் ஒன்றியத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, July 20, 2014

அனைத்துப் பள்ளிவாசல்களின் ஒன்றியத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்குச்சவெளி விசேட நிருபர் (ஏ.சீ.ஹாலீத் )

புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள முஸ்லிம் சமூகத்தின் கலாச்சார ஒழுக்க விழுமியங்களையும்ää பண்பாட்டு பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் சகல பள்ளிவாசல்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகின்ற புல்மோட்டை அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்திற்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் 2014-07-18ம் திகதி புல்மோட்டை முஹைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.


பெரியபள்ளிவாசல் தலைவர் ஜனாப் கலீல்லெப்பை தலைமையில் புல்மோட்டை பிரதேச ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி அப்துல் சமது அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேசத்தில் கடமை புரியும் கிராம சேவையாளர்களான எம்.எம்.சலாம் மற்றும் தாஜுதீன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்ற மேற்படி நிருவாக சபைத் தெரிவில் புல்மோட்டைப் பிரதேசத்திலுள்ள 14 பள்ளிவாசல்களின் பரிபாலன சபைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

புதிய நிருவாக சபைத்தலைவராக மௌலவி ஐயூப்கான்ää செயலாளராக ஏ.ஆர்.றவுப்ää பொருளாளராக மௌலவி றஹீம்ää போன்றோரும் உப தலைவராக என்.எம்.மஜீத்ää உப செயலாளராக மௌலவி பரீத் ஆகியோரும் தெரிவானார்கள். என்.எம்.மஜீத் மற்றும் மௌலவி மஹ்மூத் போன்றோர் மேற்படி ஒன்றியத்தின் முன்னாள் தலைவர்களாவர்.

No comments:

Post Top Ad