“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, July 18, 2014

“நாம் இஸ்ரேலாக மாறத் தயார்” என ஞானசார தேரர் விடுத்த எச்சரிக்கைக்கு ஒரு பதில்


ஞானசார தேரரே
புறப்படப் போகின்றேன்…!
              -மூதூர் முறாசில்

இந்த -
‘உம்மா’வின் வீட்டில்
சும்மா கிடந்த
என்னை
போராளியாய்ப்
புறப்படு என்று
உணர்வொன்று
தந்த
ஞானசார தேரரே
மனசாற
நன்றி உரைக்கின்றேன்
நான்…!


கோழையாய்
வாழ்வதிலும்
வீரனாய் மாள்வது
எவ்வளவு மேலென்று
இப்போது
எனக்குப் புரிகிறது…!
இதனால்
உங்கள்
வாயில் வந்து போகும்
‘ஜிஹாத்’படையில்
இணைந்திடு-
என்று
என்னிதயம்
அடிக்கடி
துடிப்பது தெரிகிறது…!

அதனால் -
இலங்கையில்
இயங்குகின்ற
அந்த
‘ஜிஹாத்’
இயக்கத்தின்
தலைவர் யார்?
தலைமையகம் எது?
பயிற்றுநர் யார்?
பயிற்சியகம் எது? என்று
அறிந்து கொள்ளும்
ஆவலால்
அலைந்து திரிகின்றேன்
நான்…!
இற்றைவரை
தகவல் ஏதும்
தட்டுப்படுவதாய் இல்லை…!

புதிய
பள்ளிகளை
‘ஜிஹாதிய’
பாசறைகளாய்…
அரபுக்கல்லூரிகளை
ஆயுதப் பயிற்சிக் கூடங்களாய்…
கண்டு பிடித்த தேரரேää

எல்லாப் பள்ளிகளிலும்
அரபுக் கல்லூரிகளிலும்
ஏறி இறங்கிவிட்டேன்…
‘ஜிஹாதிய’ வீரனின்
வெற்றுச் சுவட்டைக்;கூட
காணமுடியாது
களைத்துப் போய்விட்டேன்…!
காட்டிக் கொடுங்கள்
எனக்கு…!!

‘தர்கா நகர்
தீவிரவாதிகளின்
மையப் ப10மி’ என்னும்
புதிய
தகவலொன்றை
தந்தீர்கள் நீங்கள்…!
உடனே –
ஓடோடிச் சென்று
அங்குள்ள
மூலை முடுக்கெல்லாம்
தேடிப்பார்த்தேன்…

தேரரே !
நீங்கள்
அளுத்கம ‘ரோட்’டில்
ஆட்களைக் கூட்டி
இனவெறியைக்
கக்கிய போது
அதனை
பசியோடு இருந்த பலர்
நக்கிப் புசித்ததால்
போதிமாதவனின்
போதனைகளை
துறந்து
அங்குள்ள
வீடுகளையும்
கடைகளையும்
பள்ளிகளையும் கூட
திறந்து
கொள்ளையிட்ட பின்பு
கொள்ளிவைத்த எச்சங்கள்தான்
எனக்குத் தெரிகிறது…!

ஆனால் -
நான்
தேடி வந்தவர்களில்
எவரும்
எனக்குத்
தெரிவதாய் இல்லை..!!

எங்கு தேடியபோதும்
என்னெதிரே
‘இல்லை’ என்பது
முந்தி வந்து
குந்திக் கொண்டு
தொல்லை தந்ததால்
செய்வது அறியாது
பலமன
புலனாய்வு
அதிகாரிகளை
அணுகி
விசாரித்தேன்…!

விடயம் தெரிந்தால்
காதோடு காது வைத்து
கூறுமாறும் கூறினேன்…!

அதற்கவர்கள்
“அத்தகைய
படையொன்று
இல்லை
இலங்கையில்” என்று
அடித்துக் கூறிவிட்டார்கள்…!
வாயடைத்து விட்டார்கள்…!!

ஞானசார தேரரே!
உங்களது
‘மையில்’ மட்டும்
வெளிக்கும்
அந்த முஸ்லிம்
‘ஜிஹாத்’தை
காட்டித்தாருங்கள்…!

கண்டிப்பாக உங்களுக்கு
நன்றியுடன்
இருப்பேன் நான்!!

இல்லையேல்…?
நீங்கள்
இருப்பதாகக் கூறுவது
‘இல்லாத
படையொன்றே’
என்று
விடை கொண்டு
அவ்வாறு கூறும்
உங்களோடு
எல்லோரையும்
எதிர்ப்பதற்கும்
தாக்குதல்
தொடுப்பதற்கும்
நான்
புதிய போராளியாய்ப்
புறப்படப் போகின்றேன்…!

No comments:

Post Top Ad