முஸ்லிம்களை பாதுகாக்குமாறு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரசாங்கத்திடம் கோரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 05, 2014

முஸ்லிம்களை பாதுகாக்குமாறு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அரசாங்கத்திடம் கோரிக்கை

(vi)

நாட்டின் முஸ்­லிம்­களை பாது­காக்­கு­மாறு ஐக்­கிய நாடுகள் சபை­யின் பொதுச் செய­லாளர் பான் கீ மூன் இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரி­யுள்ளார். நாட்டின் சிறு­பான்மை சமூ­கங்­களில் ஒன்­றான முஸ்லிம் சமூ­கத்தை பாது­காக்க வேண்­டி­யது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும் 
என அவர்  குறிப்­பிட்­டுள்ளார்.
 
எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தனை தடுத்து நிறுத்த அர­சாங்கம் தேவை­யான ஏற்­பா­டு­களை செய்ய வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
 
இலங்­கையின் தென் பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட அடக்­கு­மு­றைகள் குறித்து பொதுச் செய­லாளர் கவனம் செலுத்தி வரு­வ­தாக, அவ­ரது பேச்­சாளர் ஸ்டிபென் டுஜாரிக் (Stephane Dujarric) தெரி­வித்­துள்ளார்.
 
இந்த சம்­பவம் குறித்து இலங்கை அர­சாங்கம் விரி­வான விசா­ரணை நடத்தி எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெ­று­வ­தனை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
 
இதே­வேளை, முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை தடுத்து நிறுத்­து­மாறு இலங்கை அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுக்­கு­மாறு வட அமெரிக்காவிற்கான இலங்கை முஸ்லிம் பேரவை, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரிடம் கோரியுள்ளது.

No comments:

Post Top Ad