என்னை ஆபாச வார்த்தைகளினால் திட்டுகின்றனர் ! அஸ்வர் எம்.பி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, July 05, 2014

என்னை ஆபாச வார்த்தைகளினால் திட்டுகின்றனர் ! அஸ்வர் எம்.பி

இரவு நேரங்களில் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் நபர்கள் கொலை செய்ய போவதாகவும் தாக்க போவதாகவும் அச்சுறுத்துகின்றனர்.
குறுஞ் செய்தி மூலமும் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம்களும் திட்டி குறுஞ் செய்தி அனுப்புகின்றனர். மிகவும் கீழ்த்தரமாக பேசுகின்றனர்.
முடியாத பட்சத்தில் நான் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தேன். ஐக்கிய தேசியக் கட்சியினரே இதன் பின்னணியில் இருக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ள முயற்சித்து வருகின்றனர். இறந்துபோன எனது பெற்றோரை கூறி என்னை திட்டுவதுடன் அச்சுறுத்தி வருகின்றனர் எனவும் அஸ்வர் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad