முஸ்லிம்களுக்கெதிரான இனவாத தாக்குதல்களை நிறுத்தக்கோரி ஐ.நாவுக்கு கடிதம்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, July 02, 2014

முஸ்லிம்களுக்கெதிரான இனவாத தாக்குதல்களை நிறுத்தக்கோரி ஐ.நாவுக்கு கடிதம்!கடந்த 2010 ஆண்டு முதல் இன்றுவரை முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள 260 நடவடிக்கைள் தொடர்பாகவும்இ அண்மையில் அளுத்கம பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட
இனவெறியாட்டப்பேராட்டம் பற்றிய விடயங்கள் உள்ளடக்கியதாக அறிக்கையொன்று புலம்பெயர் இலங்கை முஸ்லிம் சமூகம்  ( overseas ceylon communty - France  )  சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்
மற்றும் ஐ.நா செயலாளர் ஆகிய இருவரிடமும் 28-06-2014 அன்று ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா தலைமைக் காரியாலயத்தில் அச் சமூகத்தின் செயலாளர் முயீஸ் வஹாப்டீன் தெரிவித்தார்.


கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நடந்து முடிந்த கொடிய யுத்தத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாகி நிர்க்கதிக்குள்ளாகி பாதிக்கப்பட்டு மீண்டுவராத இச் சூழ்நிலையில்இ சனத்தொகையில் 9 சதவீதமாக
காணப்படும் முஸ்லிம்கள் மீது அண்மையில் அளுத்கமவில் நடந்த இனவெறியாட்டத்தினால் 8 மரணங்கள் பதிவாகினஇ 150 க்கும் அதிகமான வீடுகள் சேதமிழந்தனஇ 80;க்கும் அதிகமான
வியாபார ஸ்தலங்கள் பாதிப்படைந்தன. 17 க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் காடையர்களால் பாதிக்கப்பட்டது. இப்படி ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்பட்ட இன வெறியை
ஒரு வாரகாலமாக இலங்கை அரசும் பாதுகாப்பு துறையும் வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருந்தது.

இனிவரும் காலத்தில் இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் இந் நடவடிக்கையில் ஈடுபட்டஇ சம்பந்தபட்டவர்களை
சட்டத்தின் முன்னிறுத்துமாறும் வலியுறுத்தியே இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்ட்டது.No comments:

Post Top Ad