காத்தான்குடியில் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் மற்;றும் கடையடைப்பு- பொலிசார் பாதுகாப்புக் கடமையில் குவிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

காத்தான்குடியில் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் மற்;றும் கடையடைப்பு- பொலிசார் பாதுகாப்புக் கடமையில் குவிப்பு (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அளுத்கம ääபேருவளைääதர்கா நகர் மற்றும் களுத்துறை பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டித்து இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடிää ஓட்டமாவடி ääமட்டக்களப்பில் நகரில் முஸ்லிம் பகுதி போன்ற முஸ்லிம் பிரதேசங்களில்; 19 இன்று வியாழக்கிழமை ஹர்த்தால் மற்;றும் கடையடைப்பு என்பன இடம்பெற்றது.


இதே வேளை கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடி பிரதேசத்திலும் இரண்டாவது நாளாகவும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரதேசத்தின் கடைகள் அரச’தனியார் வங்கிகள்ää ‘பொதுச் சந்தைகள் மூடப்பட்டுள்ளதுடன் பயணிகள் போக்குவரத்துகள் மிகவும் அரிதாக காணப்பட்டு வருவதுடன் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் குவிக்கப்பட்டுள்ளதுடன் இரானுவத்தினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு நகரிலும் முஸ்லிம் வர்த்தகர்கள் ஹர்த்தாலை அனுஷ்டித்து வருகின்றனர்.

குறிப்பு அளுத்கமää தர்ஹா நகர் மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்று வன்முறைச் சம்பவங்களை வண்மையாக கண்டித்து இன்று 19-06-2014 வியாழக்கிழமை ஹர்த்தாலொன்றை நாடு தழுவிய ரீதியில் அனுஷ்டிக்குமாறு கோரி முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:

Post Top Ad