ஹட்டனில் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 04, 2014

ஹட்டனில் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் பஸ் பள்ளத்தில் பாய்ந்து விபத்து (வீடியோ இணைப்பு)


ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டனிலிருந்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு நோயாளிகள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்லும் சிட்டி ரைடர் ரக பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் வீதியை விட்டு விலகியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனவும் மழையின் காரணமாக பாதை வழுக்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post Top Ad