அளுத்கம சம்பவத்தினைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஜனாதிபதியின் உருவபொம்மை எரிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

அளுத்கம சம்பவத்தினைக் கண்டித்து தமிழ்நாட்டில் ஜனாதிபதியின் உருவபொம்மை எரிப்பு


சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தினைக் கண்டித்து தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டத்தில் முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் போராட்டம் ஒன்றை  நடாத்தினர்.
திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு அருகில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு ராஜபக்சவுக்கு எதிராக கோஷமிட்டதுடன் அவரது உருவப் பொம்மையும் எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதில் திண்டுக்கள் மாவட்ட செயலாளர் நஜிபூர் ரகுமான், மாநகர தலைவர் ஜமால்முகமது, செயலாளர் யாசர்அரபாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad