அளுத்கம, பேருவளை சம்பவங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, June 21, 2014

அளுத்கம, பேருவளை சம்பவங்கள் குறித்து சட்டநடவடிக்கை எடுக்க முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் நடந்த மோதல்கள் காரணமாக ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் சொத்துச் சேதங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து சட்ட மா அதிபரிடம் முறைப்பாடுகளை செய்த பின்னர், உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் காரணமாக இரண்டு பிரதேசங்களையும் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு பாரிய சொத்து அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு விபரங்கள் முன்வைக்கப்படும்.
வழக்கை தாக்கல் செய்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post Top Ad