புல்மோட்டை காணிப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாகீர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

புல்மோட்டை காணிப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத் தந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாகீர்அரச காணிகள் எனக்கூறி புல்மோட்டைக் காணிகளை அபகரித்த அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கு எதிராக 2013-09-09 அன்று குச்சவெளி நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து சில மாதங்களாக புல்மோட்டை மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத ஒரு நிலையில் இந்த வழக்கானது தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருந்த வேளை இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் புல்மோட்டை மக்கள் சார்பாக வாதிட சிரேஷ்ட சட்டத்தரணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர்பீட உறுப்பினருமான ஜே.எம்.லாகீர் நீதிமன்றில் தொடர்ந்தும் வாதிட்டு வந்தார்.


நேற்றைய தினம் இந்தப் புல்மோட்டை காணிப்பிரச்சினை வழக்கு குச்சவெளி நீதி மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. புல்மோட்டை காணிகளை அளக்க உத்தரவிடுமாறு அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் தரப்பில் குச்சவெளி நீதவான் கயான் நீகயாகேயிடம் விண்ணப்பம் செய்தனர் இதற்கு கடுமையான ஆற்சேபனை தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாகீர் ஏற்கனவே குறித்த காணிகள் தனியார் காணிகள் என்பதற்கான ஆவனமாக உறுதிகள் அணைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வழைக்கில் காணிகளை அளப்பதற்கு கட்டளைகளை பெற முடியாதென்றும் நீதி மன்றித்தில் வழக்கினை பிழையாக  வழிநடத்த முயற்சிக்கின்றார்கள் என்றும் காணிகளை அளப்பதற்கு கட்டளை பிறப்பிக்க கூடாதென்றும் குறித்த வழக்கினை தள்ளுபடி செய்து வழக்கின் எதிரிகளாகிய பொதுமக்களை விடுதலை செய்யுமாறு கோரினார். நீதிமன்றம் வழக்கு விண்ணப்பத்தை நிராகரித்து சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம.லாகீர் அவர்களின் விண்ணப்பத்தினை ஏற்று காணிகளை அளக்க முடியாது என்றும் பொதுமக்களை விடுதலை செய்தது,  

No comments:

Post Top Ad