தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு நன்றி தெரிவிப்பு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அளுத்கமää பேருவலவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டமையை கண்டித்து மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பு தனது நன்றியை தெரிவித்துள்ளது.


இது பற்றி ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் அக்கபர் ஹாஜி கூறுகையில் தெரிவித்ததாவதுää

முஸ்லிம் சமூகம் என்பது ஒரு உடல் போன்றது எனவும் அதன் எந்தப்பாகத்தில் அடித்தாலும் உடல் முழுவதும் வலியை உணரும் என நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள். அதற்கிணங்க தென்னிலங்கை முஸ்லிம்களுகட்டகெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் காணரமாக முஸ்லிம்கள் பாரிய பல இழப்புக்களை சந்தித்துள்ள இன்றைய நிலையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன பேரணி நடத்தியுள்ளது.

பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டில் ஒவ்வௌhரு மனிதனும் தனது வீட்டை கட்டுவதற்கு வாழ் நாள் முழுவதும் கஷ்டப்படுகிறான். ஆனால் அந்த வீட்டை சிங்கள பேரினவாதம் ஒரே நொடியில் எரித்துள்ளதன் மூலம் அந்த வீடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரே இரவில் அனாதைகளாகவும்ää அகதிகளாவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய அநியாயங்கள் 80வீதமான முஸ்லிம்கள் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில் நடந்தேறியுள்ளமை மிகப்பெரிய வரலாற்று சோகமாகும்.

இத்தகையதொரு சூழ் நிலையில் இத்தகைய தாக்குதல்களை கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியமை இலங்கை முஸ்லிம்களுக்கு ஓரளவு சுகத்தை தந்துள்ளது.

இங்கு அடித்தால் அங்கும் வலிக்கிறது என்பது இஸ்லாமிய சகோதரத்துவத்தை காட்டுகிறது.

முஸ்லிம்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு முஸ்லிம் கட்சியும் எதுவித கண்டன ஆர்ப்பாட்டத்தையும் ஏற்பாடு செய்யாத நிலையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் கவன ர்ப்பு ஆர்ப்பாட்டம் போற்றுதற்குரியதாகும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் அக்பர் ஹாஜி கூறினார்.


No comments:

Post Top Ad