கல்முனையிலும் ஹர்தால் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, June 18, 2014

கல்முனையிலும் ஹர்தால் அனுஷ்டிப்பு (படங்கள் இணைப்பு)


அளுத்கம மற்றும் பேருவளைப் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறையைக் கண்டித்து கல்முனை பிரதேசத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள், பொதுச்சந்தை, அரச அலுவலகங்கள் என்பன மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்திலுள்ள கல்முனை மாநகரசபை மட்டும் இயங்கியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹா நகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்க அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை அழைப்பு விடுத்திருக்கிறது.
இதேவேளை, கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து மீது கல்முனைக்குடிப் பகுதியில் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸார் வீதிகளில் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:

Post Top Ad