முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்படும் பொழுது உணர்வு பூர்வமாக எதிர்ப்பதும் முடிவுக்கு வரும் பொழுது மிக வேகமாக மறந்து விடுவதும் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஓர் சகஜமான விடயமாகும் என்கிறார்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

முஸ்லிம்களுக்கு பிரச்சனை ஏற்படும் பொழுது உணர்வு பூர்வமாக எதிர்ப்பதும் முடிவுக்கு வரும் பொழுது மிக வேகமாக மறந்து விடுவதும் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஓர் சகஜமான விடயமாகும் என்கிறார்- கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்(பழுலுல்லாஹ் பர்ஹான்)

எல்லா காலங்களிலும் முஸ்லிம்களுக்கு ஓர் பிரச்சனை ஏற்படும் பொழுது அதனை உணர்வு பூர்வமாக எதிர்ப்பதும்  சம்பவங்கள் முடிவுக்கு வரும் பொழுது அதை மிக வேகமாக மறந்து விடுவதும் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரையில் ஓர் சகஜமான விடயமாக இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 15.06.2014 அன்று நடைபெற்ற மிக மோசமான சம்பவங்களுக்கு முன்பு 2012இல் இருந்து சுமார் 230க்கும் மேற்பட்ட சிறிய பெரிய சம்பவங்களாக நடந்தேறியுள்ளது.

அவைகள் ஒவ்வொன்றும் நிகழும் பொழுது மிகப்பொறுமையாக முழு முஸ்லிம் சமூகத்தினுடைய பாதுகாப்பு கருதி மிக நிதானமாக அவைகளை கையாண்டோம். ஆனால் பிரச்சினைகள் எழும் பொழுது அது மிக ஆவேசமாக கண்டிப்பதும் அந்தக்கண்டன அறிக்கைகளை நமது சமூகம் தமது மன ஆறுதலுக்காக வாசித்துவிட்டு மறப்பதும் அதன் தொடர்ச்சியாக எவ்விதமான தொடர் அழுத்தங்களை அமைதியாக கொடுப்பதனூடாக அந்தந்த சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் விட்டதும் இந்த பிரச்சினை ஓர் தொடர்கதையாக மாறுவதற்கு ஏதுவாக இருந்திருக்கின்றது.

ஆனால் 15.06.2014 அன்று இடம்பெற்ற இந்த கொடூர நிகழ்வை நோக்கும்போது பொது பல சேனாவினதும் பௌத்த தீவிரவாத அமைப்புக்களினதும் குரோத நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு புற்றுநோய். இதை சாதாரண மருந்து செய்வது போல் இதற்கு தற்காலிக வைத்தியம் செய்யாமல் இந்த புற்றுநோயை இல்லாது ஒழிக்கும் வரை நாம் ஒவ்வருவரும் மிக நிதானமாக போராட வேண்டும்.

ஏற்படுத்தப்பட்ட இந்த அசம்பாவிதத்திற்கு ஓர் முடிவு காணாமல் இதற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் வரை நாம் அனைவரும் அரசியல் இயக்க வேறுபாடுகளின்றி இறுதி வரை போராடி ஓர் தீர்வை பெறவேண்டும்.

ஓர் தீவிரவாத அமைப்பு இவ்வளவு வெளிப்படையாக இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தக்கூடிய நச்சுக் கருத்துக்களை வெளியிடுகின்ற போதும் அதே நேரம் வன்செயல்களில் நேரடியாக ஈடுபட்டு உயிர்களை கொல்லுகின்ற போதும் இதற்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க ஏன் தாமதிக்கின்றது என்ற விடயம் மக்கள் மத்தியில் ஓர் பாரிய கேள்விக்குறியாக இருக்கின்றது.

பெரும்பான்மை சமூகத்தவர்கள் ஆட்சிசெய்தாலும் சிறுபான்மையினருடைய உரிமைகளை பாதுகாப்பதும் அவர்களுடைய உயிர்ääபொருளாதாரங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியதும் ஓர் ஜனநாயக அரசினுடைய கடமையாகும். இந்த விடயத்தை அரசாங்கம் மிக நிதானமாக கையாண்டாலும் அமைதிக்கு பங்கம் விளைவித்த இந்த தீவிரவாத கும்பலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென்பதை ஒருக்காலும் புறம் தள்ளிவிட முடியாது.

இதனை நாங்கள் ஒன்றுபட்டு அரசாங்கத்திற்கு உரத்த குரலில் சொல்கின்றோம்.

இவ்வாறான சு10ழ்நிலையில் இத்தீய சக்திகளை வெல்வதற்கு ஆத்மீக ரீதியாக இறைவனை பூரணமாக நெருங்குவதன் மூலம் அவனது உதவிகளை பெற்று அகிம்சை ரீதியான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக எமது இந்த சமூகத்தை எதிர்கால அழிவுகளில் இருந்து பாதுகாப்போம்.

அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றுபட்டுää நடந்த சம்பவதிற்கு அரசினுடைய நிலைபாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்தி இதற்கு பிறகு இவ்வாறான சம்பவங்கள் நிகழாது இருக்க ஓர் உறுதி மொழியினையும் சிறுபான்மையினருக்கு எதிராக இவ்வாறான வன்முறைகள் ஏற்படுத்தபடும் பொழுது எடுக்க வேண்டிய நடவடிக்கை சம்பந்தமான தெளிவினை பாராளுமன்றத்தில் ஓர் சட்டமாக நிறைவேற்றி அதனூடாக வன்முறைகாரர்களை அடக்குகின்ற வழியினை அரசு ஏற்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் விட்டு கொடுப்பு இல்லாமல் இழக்கப்பட்ட எமது உயிர்கள் இந்த தீவிரவாத இயக்கங்களினால் இறுதியாக காவு கொள்ளப்பட்ட உயிர்களாகவும்ää இதிலே காயப்பட்ட சகோதரர்கள் இறுதியாக இந்த இயக்கங்களினால் காயப்பட்டவர்களாகவும்ää இழக்கப்பட்ட சொத்துக்கள் இறுதியானதாகவும்ää இருக்கும் அளவுக்கு இந்த சமூகத்தை  ஒன்று சேர்த்து போராடுவோம்.

எல்லாம் வல்ல இறைவன் எமது தூய எண்ணங்களை பொருந்திக் கொள்வானாகää இந்த விடயத்தில் பூரண வெற்றியை தருவானாக என அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad