திருகோணமலையில் முஸ்லிம்களை தாக்கியதில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, June 23, 2014

திருகோணமலையில் முஸ்லிம்களை தாக்கியதில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலைகடந்த இரண்டு தினங்களுக்கு  முன்னர் திருகோணமலை பஸ்தரிப்பு நிலையம் முன்பாக அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான சிட்டி ஹோட்டலுக்குள் புகுந்த சிங்கள பல்கலைக் கழக மாணவர்கள் அங்கிருந்த முஸ்லிம்களை தாக்கியதில் 5 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.


இச்சம்பவத்தில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய பல்கலைக் கழக மாணவர்களில் 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சார்பில் தெரிபட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயினுதீன் முஹம்மது லாகிர். கல்வி நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய மாணவர்கள்,நாட்டைக் குழப்புகின்ற தீய சக்திகளின் கைபொம்மைகளாக செயற்பட்டு இவ்வாரான நாசகார செயல்களை செய்து அமைதியாகவுள்ள பிரதேசங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முனைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.எனவே இவர்களை எச்சரித்து விடுதலை செய்யுமாறு சட்டத்தரணி லாகிர் நீதவானிடம் வேண்டுகோளினை முன்வைத்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணி லாகிரின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.


No comments:

Post Top Ad