முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டால் அது பற்றி இராஜதந்திரிகளின் ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல நேரிடும் ! ஹக்கீம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, June 19, 2014

முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டால் அது பற்றி இராஜதந்திரிகளின் ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல நேரிடும் ! ஹக்கீம்


முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து சர்வதேச சமூகத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாஙகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டால் அது பற்றி இராஜதந்திரிகளின் ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல நேரிடும்.
அரசாங்கத்தை விட்டு விலகி அழுத்தங்களை ஏற்படுத்துவதனை விடவும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும்.
பதவியை துறப்பதன் மூலம்,  பதவி விலகாமல் இருப்பதனை விடவும் நன்மைகள் ஏற்படும் என எவரேனும் நிரூபித்தால் உடனடியாக பதவி விலகத் தயார்.
அளுத்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் வரையில் நாம் காத்திருக்கின்றோம்.
மத நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மை மக்களின் நிலைமைகள் குறித்து ஆராயும் சர்வதேச பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டும்.
இந்தப் பிரதிநிதிகள் குழு நீண்ட காலமாக இலங்கை விஜயம் செய்ய கோரிக்கை விடுத்து வரப்படுகின்றது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு உள்ளுரில் தீர்வு காண முடியாவிட்டால் வெளிநாடுகளின் உதவியை நாடுவதில் தவறில்லை என ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post Top Ad