நாட்டில் ஓர் இனமுறுகல் ஏற்பட்டு இருக்கின்ற சந்தர்பத்தில் ரமலான் எங்களை வந்தடைந்து இருக்கிறது -பெரும்பான்மை மக்களிடையே வாழுகின்ற முஸ்லிம்கள் இந்த காலகட்டத்தில் மிக அவதானமாக செயற்படவேண்டும்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, June 29, 2014

நாட்டில் ஓர் இனமுறுகல் ஏற்பட்டு இருக்கின்ற சந்தர்பத்தில் ரமலான் எங்களை வந்தடைந்து இருக்கிறது -பெரும்பான்மை மக்களிடையே வாழுகின்ற முஸ்லிம்கள் இந்த காலகட்டத்தில் மிக அவதானமாக செயற்படவேண்டும்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்(பழுலுல்லாஹ் பர்ஹான்)

அல்லாஹ்வின் பேரருளால் புனித ரமலான் எங்களை வந்தடைந்ததுள்ளதாகவும் இந்த ரமலானை நாம் பூரணமாகவும் அவதானமாகவும் பயன்படுத்த வேண்டும் எனவும் இந்த நாட்டில் ஓர் இனமுறுகல் ஏற்பட்டு இருக்கின்ற சந்தர்பத்தில் இந்த ரமலான் எங்களை வந்தடைந்து இருக்கிறது என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது இவ்வாறு இனமுறுகல் இருக்கின்ற சு10ழலில் பெரும்பான்மை மக்களிடையே வாழுகின்ற முஸ்லிம்கள் இந்த காலகட்டத்தில் மிக அவதானமாக செயற்படவேண்டும்.

அத்தோடு இரவுத்தொளுகையின் போது பள்ளிவாயலுக்கு வெளியிலே கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருப்பதுää இரவு நேரங்களில் வீதிகளிலே விளையாடிக்கொண்டிருப்பதுää இளைஞர்கள் வீதிகளிலே கூட்டம் கூட்டமாக உலாவருவதுää சஹர் நேரங்களில் வீடுகளிலே வானொலிகளை சத்தமாக கேட்பதுää இது போன்ற செயற்பாடுகள் ääஇவ்வாறான அசாதாரணசு10ழல் ஏற்படுவதற்க்கு காரணமாக அமைந்து விடும். ஒரு சிறிய அசம்பாவிதம் ஏற்பட்டால் கூட அது மிக பெரிய வன்முறையாக மாறி ஒரு ஊரையே அழித்துவிடும் என்ற அளவு இன்று முஸ்லிம் சமூகத்திற்க்கு எதிரான சதி நடந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக இளைஞர்கள் மிக அவதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்ளவேண்டும்.

ஆகவே இந்த ரமலானில் இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகம் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்வதற்க்கு இறைவனிடம் பிராத்திப்போம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad