யாழ்.குடாநாட்டலுள்ள பள்ளிவாசல்களைச் சுற்றி விஷேட அதிரடிப்படையினர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, June 21, 2014

யாழ்.குடாநாட்டலுள்ள பள்ளிவாசல்களைச் சுற்றி விஷேட அதிரடிப்படையினர்

யாழ்.குடாநாட்டில் பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம் தொழுகை இடங்கள் மீதும் கடந்த சில நாட்களாக தாக்குதல்கள் நடத்தப்படும் நிலையில் குடாநாட்டிலுள்ள பள்ளிவாசல்களின் சுற்றாடலில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் படையினரின் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்றய தினம் இரவு 11.45மணியளவில் யாழ்.சோனக தெரு பகுதியில் அமைந்துள்ள ஹமால் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இராணுவ புலனாய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்றய தினம் மாலை தொடக்கம் மானிப்பாய் பள்ளிவாசல், யாழ்.சோனக தெருவில் உள்ள பெரி ய பள்ளிவாசல் ஆகியவற்றின் சுற்றாடலில் பெருமளவு படையினர் மற்றும் விசேட அதிபரப்படையினர் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே,நேற்றய தினம் இரவு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றவுடன் அந்தப் பகுதியில் மக்கள் பெருமளவில் கூடியபோதும் தாக்குதல் நடத்தியவர்களை காணமுடியவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்றைய தினமும் நாவாந்துறை, மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் பெருமளவில் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ளதுடன், ரோந்து நடவடிக்கைகள் மற்றும் திடீர் வீதிச்சோதனைகளையும் நடத்திவருகின்றனர்.
இதேவேளை நேற்றய தினம் இரவு ஹமல் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் இனவாத நோக்கில் யாழ்.குடாநாட்டிலும் வன்முறைகளை தூண்டும் வகையில் நடத்தப்பட்டதாகவும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெரிதுபடுத்தாமல் இருக்கவே தாம் விரும்புவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad