அளுத்கம ஊரடங்கு சட்டத்தின்போது மதுபோதையிலிருந்த இரு பிக்குகளுக்கு விளக்கமறியல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, June 20, 2014

அளுத்கம ஊரடங்கு சட்டத்தின்போது மதுபோதையிலிருந்த இரு பிக்குகளுக்கு விளக்கமறியல்

அளுத்கம பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த போது அதிகமான மதுபோதையில் சட்டத்தை மீறிய இரண்டு பிக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தை பொருட்படுத்தாது இவர்கள் மதுபோதையில் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணம் செய்த போதே கைது செய்யப்பட்டனர்.
இவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியும் மதுபோதையில் இருந்ததுடன் அவரும் கைது செய்யப்பட்டார்.
கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்ட இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post Top Ad